Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 நவம்பர், 2019

கோபம்..!

 Image result for கோபம்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒரு வனப்பகுதிக்கு அருகில் ஒரு அழகான கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு சென்றான். அங்கு ஓர் அழகிய புள்ளிமான் ஒன்றைப் பிடித்து வந்து வீட்டில் வளர்த்து வந்தான்.

திடீரென ஒருநாள் அந்த மான் மாயமாக மறைந்து விட்டது. ஆனால், அது தப்பித்து ஓடவில்லை. காணாமல் போய் விட்டது. அவன் கோபத்துடன், மானைப் பிடித்துச் சென்றவனை எங்கே இருந்தாலும் தேடி கண்டுப்பிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்தான்.

அதற்காக உடனே கடவுளை வேண்டினான். கடவுளே எனக்கு தரிசனம் தாருங்கள் என்றான். உடனே கடவுளும் அவன் முன் காட்சியளித்தார். பக்தா! என்னை அழைத்ததற்கான காரணம் என்ன? என்று கடவுள் கேட்டார்.

கடவுளே! நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்து வந்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் என் முன்னே வரவேண்டும். அவனை நான் என்னுடைய கோபம் தீரும் வரை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று கேட்டான்.

கேட்கின்ற வரத்தை தரும் கடவுள், பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற சற்று தயங்கினார். பக்தா.... உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே என்றார்.

அதற்கு அவன் இல்லை கடவுளே, நான் பாசமாக வளர்த்து வந்த மான் காணாமல் போனதிலிருந்து என் மனம் எவ்வளவு கலங்கிப் போய் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்... அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறினான்.

சரி... நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பிறகு நீ என் மீது வருத்தப்படக்கூடாது என்றார் கடவுள். வருத்தப்படமாட்டேன் வரம் தாருங்கள் என்றான். சரி... நீ கேட்ட வரத்தை தருகிறேன். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்துக்கொள் என்று கூறி விட்டு கடவுள் மறைந்து விட்டார்.

உடனே, அவன் திரும்பி பார்த்தபோது அங்கே சிங்கம் ஒன்று நின்றிருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் கோபமும், பழிவாங்கும் எண்ணமும் அவனுக்கு மறைந்து போனது. பயத்தில் கை, கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. சிங்கத்திற்கு பயந்து அவன் ஓடத் தொடங்கினான்.

ஆனால், சிங்கம் அவனை விடாமல் துரத்திக் கொண்டே சென்று அடித்துக் கொன்றுவிட்டது. அவன் திருடிச்சென்றவனைப் பழிவாங்கும் எண்ணத்தில் கோபப்பட்டு கேட்ட வரம் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது.

நீதி :

கோபத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியானதாக இருக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக