Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 நவம்பர், 2019

ஏஜென்ட்கள் மூலமா... நேரடியாகவா..?! மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்?

Image result for மியூச்சுவல் ஃபண்ட்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




மியூச்சுவல் ஃபண்டுகள், `நியூ ஃபண்ட் ஆபரான NFO தவிர மற்ற நேரங்களில் அவற்றின் நிகரச் சொத்து மதிப்பான NAV அடிப்படையில்தான் விற்கப்படும். வாங்குபவர்கள் அந்த விலையில்தான் வாங்க முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் நிகர சொத்துமதிப்பு, அதை வாடிக்கையாளர் வாங்கும் முறையைப் பொறுத்து ஒன்றிரண்டு சதவிகிதங்கள் கூடுதல் குறைச்சலாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதைப்பற்றி இன்று பார்த்துவிடலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளை முகவர் மூலம் அல்லாமல் நேரடியாக வாங்குவதற்கு `டைரக்ட் மியூச்சுவல் ஃபண்ட்’ என்று பெயர். மற்றவற்றுக்கு, `ரெகுலர் மியூச்சுவல் ஃபண்ட்’ என்று பெயர்.
டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்களின் விலை, ரெகுலர் ஃபண்டுகளின் விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும். காரணம், அதில் முகவர் கமிஷன் இல்லை. ஒரே விதமான மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை ரெகுலர் ஃபண்டில் வாங்குவதற்கும், டைரக்ட் ஃபண்டில் வாங்குவதற்கும் இடையே வேறுபாடு உண்டு. ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கினால் ரெகுலரில் கிடைப்பதைக் காட்டிலும் டைரக்ட்டில் கூடுதல் யூனிட்கள் கிடைக்கும். வாங்குபவருக்கு லாபம்.
உதாரணத்திற்கு HDFC Top 100 ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ, டைரக்ட் முறையில் வாங்கினால் 1.28%. அதையே ரெகுலர் என்ற இடைத்தரகர் மூலம் வாங்கினால் 1.78%. அரை சதவிகிதம் கூடுதல். இதனால் அதே பண்டின் NAV , இந்த இரண்டு முறைகளிலும் சற்று வித்தியாசப்படும். லட்ச ரூபாய்க்கு அந்த ஃபண்டின் யூனிட்டுகள் வாங்கினால், 500 ரூபாய் வேறுபாடு. ரெகுலரில் 500 ரூபாய் குறைச்சல் அல்லது டைரக்டில் 500 ரூபாய் கூடுதல். 10,000 ரூபாய்க்கு வாங்கினால் 50 ரூபாய் வித்தியாசம்.
அதென்ன `வாங்கும் முறை’ என்கிற சந்தேகம் சிலருக்கு வரலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளை இரண்டு விதங்களில் வாங்கலாம். முதலாவது திட்டத்தை நடத்தும் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC) யிடமிருந்து நேரடியாக வாங்குவது. இதை அந்த நிறுவனங்களின் போர்ட்டல்களில் வாங்கலாம். இதன் பெயர் டைரக்ட் முறை. AMC-களின் போர்ட்டல்கள் தவிர, MF Utility, Camsonline, KarvyKtrack போன்ற இணையதளங்களிலும் டைரக்ட் திட்டங்களை நேரடியாக வாங்கலாம். இவற்றில், எல்லாம் முழுவதும் இலவசம். எந்தக் கட்டணமும் இல்லை. இவற்றில் வாங்கும்போது எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவு. இப்படியாக 15 க்கும் மேற்பட்ட பிளாட்பார்ம்கள் இருக்கின்றன. சிலவற்றில் ஓரளவு கட்டணம் உண்டு.
இரண்டாவது வழி, AMC-களிலிருந்து வாங்கித்தரும் இடைத்தரகர் மூலம் வாங்குவது. இவற்றை ஆன்லைன் மூலமோ, ஆஃப்லைன் மூலமோ வாங்கலாம். இதன் பெயர் ரெகுலர் முறை. இடைத்தரகர்களாக பங்குத் தரகர்கள், நிதி ஆலோசனை நிறுவனங்கள், தனி நபர்கள் / ஃபைனான்சியல் அட்வைசர்கள். ஐ.ஐ.சி.ஐ டைரக்ட், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.
ரெகுலருக்கும் டைரக்டுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு, ஈக்விட்டி ஃபண்டுகளில் இருக்கும் அளவு டெப்ட் ஃபண்டுகளில் இருக்காது. காரணம், டெப்ட் ஃபண்ட்களில் டைரக்ட் முறையிலேயே `எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ குறைவுதான்.
``எக்ஸ்பென்ஸ் ரேஷியோவா... அதென்ன?" என்று சிலர் கேட்கலாம்.
அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனிகள் (AMC) அவை நடத்தும் ஒவ்வொரு திட்டத்திற்கும், பல்வேறு நிர்வாகச் செலவுகள், ஃபண்டு மேனேஜர் போன்றோரின் சம்பளம், போனஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை விநியோகிக்க (விற்க) ஆகும் கமிஷன் என்று பல செலவுகள் செய்யவேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகள் எந்த வகையைச் சேர்ந்தவை - ஈக்விட்டியா, டெப்டா, இன்கமா, குரோத்தா, நிதியின் தொகை எவ்வளவு என்ற அடிப்படையில் செலவுகள் மாறுபடும். நிர்வாகம் செய்யும் திறமை மற்றும் நேர்மை ஆகிவற்றாலும் அது கூடலாம் அல்லது குறையலாம்.
மியூச்சுவல் ஃபண்டு என்பது பலரிடம் பணம் பெற்று, முதலீடு செய்து லாபம் பார்த்து, பிரித்துக்கொடுப்பது. இந்தச் செலவுகள் போக மீதம் இருப்பதுதான் லாபம். மியூச்சுவல் ஃபண்டு யூனிட்களின் NAV எனப்படும் நிகர சொத்து மதிப்பு ஒரு சிறிய அளவில் இந்தச் செலவாலும் பாதிக்கப்படும்.
பல்வேறு AMC-களும் வெவ்வேறு அளவுகளில் செய்து கணக்கெழுத, முதலீட்டாளர்கள் பணத்தைச் செலவு செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், கண்காணிப்பு ஆணையம், செபி இதற்கு அளவுகள் வைத்திருக்கின்றன.
அந்த அளவு, ஒரு திட்டம், அது நிர்வகிக்கும் மொத்தப் பணத்தில் எத்தனை சதவிகிதம் வரை மட்டும் செலவு செய்யலாம் என்பதுதான். இதை, `டோட்டல் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ (TER) என்பார்கள்.
இந்த TER அளவை கடந்த செப்டம்பர் 2018-ல் செபி குறைத்திருக்கிறது. என்ன வகை திட்டங்களுக்கு, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (AUM) எவ்வளவு இருக்கவேண்டும், எத்தனை சதவிகிதம் வரைமட்டுமே இருக்கவேண்டும் என்று நிர்ணயம் செய்திருக்கிறது.
அதன்படி, மிக குறைந்தபட்சமாக 0.8 சதவிகிதத்திலிருந்து மிக அதிகபட்சமாக 2.25 சதவிகிதம்தான் இருக்கலாம். எந்த வகை திட்டங்களுக்கு எவ்வளவு சதவிகிதம் என்பது கீழே இருக்கும் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முதலீடுஇவைதவிர முதல் 30 பெரிய நகரங்களுக்கு வெளியில், சிறுமுதலீட்டாளர்களுக்கு (ஒரு வர்த்தகத்தில் 2 லட்சம் ரூபாய்க்குள்) விற்பனை செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 30 பேசிஸ் பாயின்ட்ஸ் (0.3%) கூடுதலாகச் செலவு செய்யலாம்.
இப்படி செபி குறைத்ததும், பல்வேறு அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளும், அதுவரை முகவர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்குக் கொடுத்துவந்த கமிஷனைக் குறைத்துவிட்டன. தவிர, நேரடியாக அவர்கள் வலைதளங்கள் மூலம் வாங்குபவர்களுக்குக் கட்டணம் இல்லை என்றும் சொல்லிவிட்டன. இதன்மூலம் AMC அதன் மற்ற செலவுகளைக் குறைக்க வேண்டியதில்லை.
நம் நாட்டில் தற்போதைய நிலவரப்படி 1,24,000 மியூச்சுவல் ஃபண்டு டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர், `இண்டிபெண்டென்ட் ஃபைனான்சியல் அட்வைசர்கள். சில நிறுவனங்கள் டிஸ்ட்ரிபியூஷன் வேலையைச் செய்கின்றன. அவர்களுக்கு `கார்ப்பரேட் ஏஜென்ட்கள்' என்று பெயர். அவை விற்பனையாளர்களை வேலைக்கு அமர்த்தி விற்பனை செய்யும்.
ஒரு விதமான திட்டத்தை விற்பனை செய்ய, எல்லா AMC -களும் ஒன்றுபோல கமிஷன் கொடுப்பதில்லை. சில நிறுவனங்கள் கூடுதலாகவும், வேறு சில குறைவாகவும் கொடுக்கின்றன. இதனால் முகவர்கள், அதிக கமிஷன் கிடைக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளை பரிந்துரை செய்யும் ஆபத்து, ரெகுலரில் இருக்கிறது. அதே சமயம், சிறிய விலை வேறுபாட்டிற்காக டைரக்ட் முறைக்குப் போகிறவர்களுக்கு முகவர்கள் மூலம் கிடைக்கிற `சர்வீஸ்’ கிடைக்காது. அவர்கள் வழங்கும் சர்வீஸில் `நோ யுவர் கஸ்டமருக்கான (KYC)' வேலைகளும் அடங்கும்.
வீடு வாங்கினால், வாடகைக்குப் பிடித்தால் புரோக்கர் கமிஷன் கொடுப்பது போன்றதுதான் ரெகுலர் முறையில் வாங்கும்போது கொடுக்கும் கூடுதல் விலையும். அதற்குண்டான பலன்கள் இருக்கவே செய்யும். டைரக்ட்டில் வாங்கும்போது, எது சிறந்தது என்பதை வாங்குபவரே தேர்வு செய்யவேண்டும். அது சுலபமல்ல என்று நினைப்பவர்களும் உண்டு.
மியூச்சுவல் ஃபண்டு குறித்து நன்கு அறிந்தவர்கள் டைரக்ட்க்குப் போகலாம். அதிக பரிச்சயம் இல்லாதவர்கள், அதிக நேரம் செலவழிக்க முடியாதவர்கள், தெளிவு கிடைக்கும் வரையிலாவது முகவர்கள் மூலம் போகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக