சிரிக்கலாம்
வாங்க...!!
பேஷன்ட்
: டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!
டாக்டர்
: கனவு தானே வருது... அதனால என்ன?
பேஷன்ட்
: இல்ல டாக்டர்... இடை இடையே இந்தக் கனவை உங்களுக்காக வழங்குபவர்கள்-னு விளம்பரம்
வேற வருதே!
டாக்டர்
: 😳😳
இன்றைய கடி !!
😂
சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துக்கிட்டு போகலாம். ஆனால் டிபன்
கேரியர்ல சைக்கிளை வெச்சு எடுத்துக்கிட்டு போக முடியாது.
😂
என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
😂
நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வெச்சிருந்தாலும், அதுல எவ்வளவுதான் ரீசார்ஜ்
பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
😂
க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?
😂
செல்போன்ல பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுஷனுக்கு கால் இல்லைன்னா
பேலன்ஸ் பண்ண முடியாது.
வேடிக்கைக்காக
மட்டுமே !!
😝
தபால்காரரும், பால்காரரும் ஒன்றுக்குள் ஒன்றானவர்கள் எப்படி? - தபால் என்ற
வார்த்தைக்குள் பால் இருக்குதே!
😝
செய்தி வாசிப்பவர் திணறித் திணறி செய்தி வாசித்தார், ஏன்? - அவர் வாசித்தது
முக்கிய செய்திகள்!!
😝
உலகத்தையே மாற்றப்போகிறேன் என்று சபதம் எடுத்தவன், ஒரு நொடியில் மாற்றிவிட்டான்
எப்படி? - தன் வீட்டில் இருந்த உலக உருண்டையை மாற்றி, புதிதாக வாங்கி வைத்தான்.
இது
சிரிக்கவா? இல்லை சிந்தித்து பார்க்கவா?
மூங்கில்
வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு
மூங்கில் வெட்டச் சென்றார்.
பையனோ
விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும்
பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை
வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். நாம் அப்புறம் பேசிக்
கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி
வைப்பியாம் என்றார். பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர்
மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். அப்பா... அப்பா... என்றான் பையன். என்னடா? என்று
கோபத்துடன் கேட்டார். இந்தக் காட்டாறு எங்கே போகுது? என்று கேட்டான். நம்ம
வீட்டுக்குத்தான் என்றார் அவர்.
பையன்
அதற்குப் பிறகு கேள்விகளே கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர்
பையனின் கையைப் பிடித்துக் கொண்டு வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம்
எங்கே அடுக்கி வெச்சிருக்க? என்று கேட்டார்.
பையன்
சொன்னான்... நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம
வீட்டுக்குப் போயிருக்கும்..! என்று பொறுமையாக பதில் சொன்னான் செல்ல மகன்.
கருத்து :
இளம்
வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக