இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை
பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் இன்று அதிகாலையில் ஒரு கொள்ளைச் சம்பவம்
நடந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள்
வெளியாகியுள்ளன. அதில், பர்மா பஜாரில் கடைகள் மூடப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லை.
அதிகாலை 3.30 மணியளவில் பைக்கில் இரண்டு பேர் அங்கு வருகின்றனர்.
அதில்
ஒருவர் பைக்கை விட்டு இறங்கி, கையில் கம்பியோடு ஒரு கடையின் ஷட்டரின் பூட்டை
உடைக்க முயற்சி செய்கிறார். அது, தோல்வியடைந்ததும் அடுத்த கடைக்கு அவர்
செல்கிறார். அந்தக்கடையின் ஷட்டரில் உள்ள இரண்டு பூட்டுகளையும் கம்பியால் நெம்பி
உடைக்கிறார். இதற்கு ஒன்றரை நிமிடங்களாகின்றன.
ஷட்டரை
உடைத்ததும் கம்பியைக் கொண்டு பைக்கில் வைத்துவிட்டு மீண்டும் கடைக்கு வருகிறார்.
அதன்பிறகு ஷட்டரை மேலே தூக்கி கடைக்குள் இருக்கும் செல்போன்களை கைகளில்
அள்ளுகிறார். அதில் நல்ல செல்போன்களை மட்டும் எடுத்துவிட்டு ஷட்டரை மூட முயற்சி
செய்கிறார். ஆனால், கடையின் உள்ளே இருந்து எடுத்த மேஜையை அவரால் கடைக்குள் தள்ள
முடியவில்லை.
இதனால்
அவரால் ஷட்டரை மூடாமல் சிறிது நேரம் அதோடு போராடுகிறார். பிறகு அந்த மேஜையை
வெளியில் எடுத்துவிட்டு உள்ளே சென்று கையில் ஒரு பெட்டியோடு வெளியில் வருகிறார்.
அதையும் பைக்கில் வைத்துவிட்டு மேஜையை உள்ளே தள்ளிவிட்டு ஷட்டரை பூட்டிவிட்டு
பைக்கின் அருகில் வருகிறார். அப்போது பைக்கை ஸ்டார்ட் செய்தபடி நிற்கும் இளைஞரோடு
கொள்ளையன் தப்பிச் செல்கிறார்.
இந்த
சிசிடிவி வீடியோ 4.31 நிமிடங்கள் பதிவாகியுள்ளது. அதன்அடிப்படையில் போலீஸார்
விசாரித்துவருகின்றனர். கொள்ளையன் வந்த பைக்கின் பதிவு எண் அடிப்படையிலும் விசாரணை
நடந்துவருகிறது. சிசிடிவி கேமராவில் சிக்காமலிருக்க கொள்ளையன், கண்ணாடி அணிந்தும்
தலையை துணியால் சுற்றியும் உள்ளார். சர்வசாதாரணமாக கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்லும்
காட்சிகளைப் பார்த்த பர்மா பஜார் வியாபாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து
நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை மாநகரம் முழுவதும் மூன்றாவது
கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம்
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டுவருகிறார்கள். இன்று
அதிகாலை பர்மா பஜாரில் ஒரு கடையில் ஷட்டரை உடைத்து செல்போன்களை கொள்ளையடிக்கும்
காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் கொள்ளையனின் முகம் தெளிவாகத்
தெரிகிறது. இதனால் விரைவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரைப் பிடித்துவிடுவோம்"
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக