Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 நவம்பர், 2019

அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்!

 Image result for google 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

தாக்குதலில் இருந்து தப்பிக்க பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என முக்கியமானவர்களுக்கு APP திட்டத்தை உருவாக்கிய கூகுள்

உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 12 ஆயிரம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த 12 ஆயிரம் நபர்களில் 500 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசு ஆதரவுடன் கூகுளில் சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயல்பாடுகளை வேவு பார்க்கின்றார்கள் என்ற புகாரினை முன் வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். உலகம் முழுவதும் இவ்வாறு 12000 நபர்களை எச்சரிக்கை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்திய பிரஜைகளை வேவு பார்க்கின்றார்களா அல்லது வெளிநாட்டு பிரஜைகளை வேவு பார்க்க ஹேக்கர்களுக்கு அரசு உதவுகின்றதா என்பது இதுவரை கண்டறியப்படாத ஒன்றாக இருக்கிறது.
”வேவு பார்க்க விரும்பும் நபர்களுக்கு க்ரெடென்சியல் பிஷிங் ஈ-மெயில்களை முதலில் அனுப்புகின்றார்கள் ஹேக்கர்கள். கூகுளில் இருந்து அனுப்பப்படும் மெயில்கள் போலவே மிகவும் பாதுகாப்பான மெயிலில் பயனாளர்கள் தங்களின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்களை தெரியப்படுத்தவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்தில் மிக முக்கியமான தகவல்களை பதிவு செய்தது. இந்தியாவில் இருக்கும் 121 நபர்களின் நடவடிக்கைகளை வேவுபார்க்க இஸ்ரேல் நாட்டின் ஸ்பைவேரான பேகாசஸ் பயன்படுத்தப்பட்டதாக அறிவித்தது வாட்ஸ்ஆப் நிறுவனம். மனித உரிமையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்டறிய இது பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூகுளும் வேவு பார்ப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு வலைப்பதிவில், கூகிளின் ஷேன் ஹன்ட்லி கூகுளின் நிறுவனத்தின் அச்சுறுத்தல் அனலிட்டிக்ஸ் குழு ”உளவுத்துறை தகவல்களைத் திருட, அறிவுசார் உருவாக்கத்தை திருட, செயல்பாட்டாளர்கள், மற்றும் மாற்றுக் கருத்து உடையவர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த, தவறான தகவல்களை பரப்பு” 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 270க்கும் மேற்பட்ட வேவு குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்” என்று கண்டறிந்துள்ளதாக எழுதியுள்ளார்.
பிஷ்ஷிங் மெயில்கள் மூலமாக தகவல்களை பெற்றுக் கொண்டு வேவு பார்க்க துவங்குகின்றனர் ஹேக்கர்கள். 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் இருந்த அளவு ஹேக்கர்கள் இன்றும் செயல்படுகிறார்கள் என்றும் அவர்களின் செயல்பாடு மற்றும் எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அறிவித்துள்ளது கூகுள். அமெரிக்கா, கனடா, ஆஃப்கானிஸ்தான், தென்கொரியா நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அரசு உதவியுடன் செயல்படும் ஹேக்கர்கள் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை தாக்க முற்படுவதை நாங்கள் முற்றிலுமாக தடுத்துள்ளோம் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.
இது போன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்க பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என முக்கியமானவர்களுக்கு Advanced Protection Program (APP) என்ற திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்று கூகுள் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக