Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

இதுதான் நம்ம "சர்கார்"- இந்திய அரசின் அத்தியாவசிய 'ஆப்'கள்: ஒன்றாவது உங்களிடம் உள்ளதா?


Image result for play store

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


டிஜிட்டல் இந்தியா அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு அரசு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஏராளமானோர் மொபைல் போனில் ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் ரயில்வே ஆப்கள் இருக்கும். இந்த ஆப்களின் செயல்பாடும் சிறப்பாகவே இருக்கும். அதேபோன்று இந்திய அரசாங்கம் ஆசிரியர், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. அனைத்தும் செயல்பாட்டில் உள்ள இந்திய அரசின் செயலிகள்.
பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு

நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணர்கிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள கால் பட்டனை ஒருமுறையோ அல்லது தொடர்ந்து மூன்று முறையோ அழுத்தினால் போதும், நீங்கள் இருக்கும் மாவட்டத்தின் அவசர தொடர்பு எண்ணுக்கு அழைப்பு சென்றுவிடும். அங்கிருந்து தேவைக்கேற்ப லொகேஷனை டிராக் செய்வதோடு பாதுகாவலர்களும் விரைந்து விடுவர்.

ராணுவ பயன்பாடு செயலிகள்

ராணுவ பயன்பாடு செயலிகள்

ராணுவம் குறித்து அனைவருக்கு தனி மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு நம் சார்பில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் சிலருக்கு தெரியாமல் இருக்கும். இந்த மொபைல் பயன்பாட்டின் மூலம், குடிமக்கள் ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தலாம் மற்றும் கடமையை பாதுகாப்பதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யலாம்.
நடுரோட்டில் செல்போனை பறித்து சிட்டாக பறந்த இளைஞர்கள்: மூவரை கைது செய்த போலீஸார்
டிஜி லாக்கர்:

டிஜி லாக்கர்:

தங்களது மொபைலில் முக்கியமாக உள்ள ஆவணங்களை இந்த செயலியில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். தனிநபர் தகவல் திருட்டுப்போகிறது என்று அச்சப்படும் நிலையில் இதுபோன்ற செயலிகள் பெரிதளவு உதவியாக இருக்கும்.
எம்.பரிவாஹன் செயலி

எம்.பரிவாஹன் செயலி

வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான உரிமம் தொடர்பான சிக்கல்களுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று அசல் சான்றிதழை பெற வேண்டும். அதற்கு முன்பாக போலீஸாரிடம் பிடிப்பட்டால், இந்த செயலியின் மூலம் தங்களது வாகனத்தின் ஆவணங்களையும், ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களையும் பெறலாம்.
 எம் பாஸ்போர்ட் செயலி

எம் பாஸ்போர்ட் செயலி

பாஸ்போர்ட்டுக்கு பதிவது எப்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன, எப்போது பாஸ்போர்ட் வரும் போன்ற பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் இந்த செயலியின் மூலம் எப்படி அப்ளை செய்வது மற்றும் தற்போது தங்களின் பாஸ்போர்ட் குறித்த நிலை என்ன எப்போது வரும் என அனைத்து விவரங்களையும் பெறலாம்.
உமாங் செயலி

உமாங் செயலி

இந்த செயலி பலரிடமும் இருப்பதை பார்த்திருப்போம். இந்த செயலிக்குள் சென்றால் பல்வேறு தகவல்கள் குறித்த செயலிகளை காண்பிக்கும். இதன்மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஓய்வூதியம் குறித்த தகவல் வேண்டுமென்றால் இந்த செயலிக்குள் சென்று ஓய்வூதியம் குறித்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இந்தியன் போலீஸ்

இந்தியன் போலீஸ்

பொதுவாக வெளி ஏரியாவிற்கு, ஊருக்கோ, மாநிலத்திற்கோ சென்றால், அங்கு ஏதாவது பிரச்சனை என்றால் யாரை அணுகுவது காவல் நிலையம் எங்கு உள்ளது என்ற குளறுபடி ஏற்படும். அப்போது இந்த செயலியை பயன்படுத்திக் கொண்டு அருகில் உள்ள காவல்நிலைய தொலைபேசி எண் மற்றும் இருக்கும் இடம்(லொகேஷன்) ஆகியவையை காட்டும்.
கிருஷி கிஷான் ஆப்

கிருஷி கிஷான் ஆப்

இந்த செயலியின் விவசாயிகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் ஒவ்வொரு வகையான விதைகளும் எப்படி பயிரிடப்படுகிறது. எப்படி வளர்ந்து அறுவடை செய்யப்படுகிறது என்பதை அறியலாம். அதோடு தங்கள் இருக்கும் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுவைகள் எவை என்பது குறித்தும் அறிந்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஊட்டியில் ஏலக்காய், போடி போன்ற பகுதிகளில் தேயிலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அறிந்துக் கொள்ளலாம்.
கேலோ இந்தியா

கேலோ இந்தியா

இந்த செயலியின் மூலம் அருகில் உள்ள விளையாட்டு பயிற்சி நிலையம். அங்கு எந்த வகையான விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாம் அதில் பங்கேற்கலாம் உள்ளிட்டவைகள் அறிந்து கொள்ளலாம். அதோடு, சிறுவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கூடம் எங்குள்ளது என்பதையும் அறியலாம்.
நுகர்வோர் புகார் செயலி

நுகர்வோர் புகார் செயலி

நுகர்வோர்கள் தங்களது புகார்களை இந்த செயலியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளில் பதிவிடலாம். அந்த செயலியின் புகார் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
யூடிஎஸ் ஆப்:

யூடிஎஸ் ஆப்:

ரயிலில் பயணிக்கும் போது முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி என்ற செயலியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அன்ரிசர்வேஷன் செயலியை பதிவு செய்வது எப்படி. நேரடியாக சென்றுதான் டிக்கெட் எடுக்க முடியுமா என்ற பல்வேறு கேள்விகள் வரும். ஆனால் டிக்கெட் கவுண்டரில் நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுக்க வேண்டாம். இந்த செயலி மூலம் அன்ரிசர்வேஷன் டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம்.
பீம் ஆப்:

பீம் ஆப்:

கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது வழக்கம். ஆனால் அதேபோன்று பீம் ஆப் என்று ஒன்று உள்ளது.இதன் மூலம் பாதுகாப்பாக பணத்தை செலுத்தவும், பெறவும் முடியும். அதேபோல் இதில் எளிதாக ஒருவரின் அக்கவுண்ட் நம்பர் டைப் செய்து அதில் பணம் செலுத்தவும் முடியும்.
மைகவரன்மென்ட் ஆப்

மைகவரன்மென்ட் ஆப்

இந்த ஆப் மூலம் அரசாங்கம் குறித்த தங்களின் கருத்துகளையும், தகவல்களையும் பெறலாம். அதேபோல் தங்களுக்கென புதுவகையான சிந்தனை ஏதேனும் இருந்தால் அதையும் இந்த செயலி மூலம் அறிவிக்கலாம்
.
இபாஸ்தா ஆப்

இபாஸ்தா ஆப்

இந்த செயலியானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கானது. இதன்மூலம் இபுக் உள்ளிட்டவைகளை பெறலாம்.
இதுபோன்று மேலும் பல்வேறு அரசு செயலிகள் உள்ளது. இது அனைத்தும் செயல்பாட்டில் உள்ளது எனவே அனைவரும் இதை பதவிறக்கம் செய்து பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக