இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஞானமணி என்பவர் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சௌகார்பேட்டை வரை சென்றுள்ளார். அங்கு ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.
அந்த பஜ்ஜி சரியில்லை என கடைக்காரரிடம் ஞானமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பஜ்ஜி கடையில் வேலைபார்த்த அருண் என்கிற வடமாநில இளைஞருக்கும் ஞானமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால்,
ஞானமணியை தலையில் வெட்டியுள்ளார். ரத்தம் கொட்டிய நிலையில் ஞானமணியை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடனிருந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை அருகில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக