Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

அமேசான் கின்டெல்க்கு ஆப்பு வைத்த சியோமி; சூப்பர் பட்ஜெட் விலையில் மி ரீடர்அறிமுகம்!

 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


அமேசான் நிறுவனத்தின் கின்டெல் போலவே காட்சியளிக்கும் இந்த மி ரீடர் ஆனது அம்சங்களோடு மட்டுமின்றி, விலை நிர்ணயத்திலும் அமேசான் கின்டெல் உடன் கடுமையாக போட்டியிடும் என்பது போல் தெரிகிறது.

சமீபத்தில் ஸ்மார்ட் மீன் தொட்டி ஒன்றை அறிமுகம் செய்த போதே சியோமி நிறுவனமானது எந்தவொரு தயாரிப்பையும் விட்டுவைக்கப்போவதில்லை என்கிற எண்ணம் மேலோங்கியது. அதை உறுதி செய்யும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் சியோமி நிறுவனம் அதன் இபுக் ரீடரின் அறிமுகம் சார்ந்த டீஸர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இறுதியாக அது மி ரீடர் எனும் பெயரின் கீழ் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவாரசியமாக இந்த சாதனம் அமேசானின் கின்டெல் போலவே தோற்றமளிக்கிறது மற்றும் எச்டி இ-இன்க் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 24 ப்ரைட்னஸ் செட்டிங்ஸ்களை ஆதரிக்கிறது மற்றும் 90 சதவிகிதம் வரை சீரான ப்ரைட்னஸ் கவரேஜை அனுமதிக்கிறது.

பரந்த அளவிலான ஃபைல் பார்மட்களை ஆதரிக்கும் இந்த மி ரீடர் ஆனது ஒரு க்வாட்கோர் ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட கஸ்டம் ஸ்கின் கொண்டு இயக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்த மி ரீடர் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைக் கொண்டுள்ளது மற்றும் 1,800 எம்ஏஎச் அளவிலான பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

சியோமி மி ரீடரின் விலை:

இந்த சாதனத்தின் க்ரவுட் ஃபண்டிங் செயல்முறையின் போது இது தோராயமாக ரூ.5,900 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது. ஒருமுறை க்ரவுட் ஃபண்டிங் செயல்முறை முடிந்ததும் அல்லது இலக்கை அடைந்ததும், மி ரீடரின் விலையானது தோராயமாக ரூ.6,100 என்று உயர்த்தப்படும்.

இருப்பினும், இந்த மி ரீடர் ஆனது எப்போது திறந்த விற்பனைக்கு செல்லும் என்பதையும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் இது நுழையுமா என்பதையும் அதை சியோமி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் சீனாவில் மி ரீடரின் ஏற்றுமதியானது டிசம்பர் 18 முதல் தொடங்கும் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

சியோமி மி ரீடரின் அம்சங்கள்:

புதிய மி ரீடர் ஆனது 6 இன்ச் அளவிலான எச்டி இ-இன்க் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 212 பிபி பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த சியோமி இபுக் ரீடர் ஆனது 24 ப்ரைட்னஸ் ப்ரீசெட்களை ஆதரிக்கிறது, TXT, EPUD, PDF, DOC, XLS, PPT போன்ற பல கோப்பு வடிவங்களுடன் இணக்கமானது மற்றும் இணக்கமான WPS மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் உள்ளடக்கத்தின் முழு தொகுப்பையும் கொண்டுள்ளது.

தவிர பயனர்கள் க்ளவுடில் இருந்து தங்களது லைப்ரரியை இம்போர்ட் செய்வதற்கும், தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக கண்டறிந்தவற்றை Mi ரீடருக்கு மாற்றுவதற்கும் இது அனுமதிக்கிறது.

மி ரீடரில் 1,800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக வழங்கப்பட்ட 5 வி / 1.5 ஏ சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, இந்த சாதனம் தடிமனான வெள்ளை பெசல்கள் மற்றும் கருப்பு பின்புற பேனலுடன் டூயல்-டோன் வடிவமைப்பை கொண்டுள்ளது, ஆகமொத்தம் இது ஒரு கடினமான அமைப்பை கொண்டுள்ளது.

சியோமியின் புதிய இபுக் ரீடர் ஆனது 1.8GHz க்ளாக்டு கேவாட் கோர் ஆல்வின்னர் பி 300 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி மி ரீடர் ஆனது அண்ட்ராய்டு 8.1 ஐ கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. அளவீட்டில் இது 159.2 x 116 x 8.3 மிமீ மற்றும் 178 கிராம் எடையும் கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக