Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

தலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா? இத பண்ணுங்க…!

 Image result for தலைவலி



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கோடைக்காலம், மழை காலம் மற்றும் பனிக்காலம் என எல்லா காலங்களிலும் ஏற்படும் ஒரு பிரச்சனை தலைவலி. இதில் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஐந்து பெண்களில் இரண்டு பேர் ஒற்றை தலைவலி மற்றும் கடுமையான தலைவலியைப் பெறுகிறார்கள் என்கிறது. தலைவலி என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை. அந்த நேரங்களில் சாதாரணமாக இருக்க முடியாது. மிக அதிக வலியுடன் அழுத்தமும் காணப்படும்.

எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால், தலைவலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நிறையப் பேர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். தலைவலி வந்தவுடனே தலையே வெடிச்சிடும்போல இருக்குனு சொல்லி கஷ்படுறதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் தலைவலி வருகிறது?. தலைவலி வருவதற்கு முன்பு எப்படி அதை இயற்கையான முறையில் தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
தலைப்பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில், இரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக ஏற்படுகிறது. அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் இரத்த அழுத்தத்தின் அளவை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
* கவலை
* வேலை பளூ
* மூளை சம்பந்தமான பிரச்சனைகள்
* உடல் சோர்வு
* பல் வலி அல்லது பல் சம்பந்தமான பிரச்சனைகள்
* போதை பொருட்கள் உபயோகப்படுத்தல்
* தொற்று நோய்கள்
* ஒரே சிந்தனையில் அதிக நேரம் இருப்பது
* அதிகமாக யோசிப்பது
* தூக்கமின்மை
* மன அழுத்தம்

தலைவலிக்கான அறிகுறிகள்
தலையின் இரண்டு பகுதியிலும் தலைவலி ஏற்படும். இல்லையென்றால் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும். இதற்கு ஒற்றை தலைவலி என்று பெயர்.
* காய்ச்சல்
* சளி மற்றும் இரும்பல்
* வாந்தி மற்றும் குமட்டல்
* உடல் வலி
* கண்ணில் வலி ஏற்படுதல்
* மன அழுத்தம்
* உணவு ஒவ்வாமை
* மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்

மன அழுத்தத்தைக் குறைப்பது
தீவிரமாக எதைப் பற்றியே யோசிப்பது, தேவையில்லாமல் பயம் கொள்வது மற்றும் வேலை பளு அதிகம் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் ஏற்படுவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்களினால் மனதை அமைதிப்படுத்த வேண்டும். மன அமைதியாக இருக்கும்போது தலைவலி ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் இல்லை.

கண்களுக்கு ஓய்வு
இன்று அனைவரது கைகளையும் ஆக்கிரமித்து இருக்கிறது மொபைல் போன். கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பவர்கள்தான் அதிகம். இதனால், கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும் வாய்ப்பு அதிகம். அதன் அறிகுறிதான் தலைவலி.
கண்களில் ஏற்படும் பிரச்சினைகளால் தலைவலி ஏற்படும். அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.
சைன்ஸ் பிரச்சனை
தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
சைனஸ் பிரச்சினையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும். மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் காலை, மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

இஞ்சி
மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. துளசி, சுக்கு போன்றவை இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாத மூலிகைகள். இவைகள் மூலம் தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம்.
இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளதால், தினமும் காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு 2 டீஸ்பூன் குடித்தால் தலைவலி வராமல் தடுக்கலாம். துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் தலைவலி விரைவில் நீங்கும்.

நல்ல உறக்கம்
இரவில் வெகு நேரம் கண்விழித்து இருந்தாலும் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் 7 மணி நேரமாவது நல்ல உறக்கம் கொள்ளவேண்டும். நல்ல உறக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. தினமும் சாரியான நேரத்தில் தூங்கி எழுந்து வந்தால் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு குறைவு.

போதை பழக்கம்
புகை, மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்படும். போதை பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது.
ஆதலால், போதை பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை தலைவலியை அதிகரிக்கும்.

சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே தலைவலி பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம்.
* சிப்ஸ்
* காபி
* ஜாம்
* கார்ன் ஃப்ளேக்ஸ்
* நூடுல்ஸ்
* பாஸ்தா
* சீஸ் உணவுகள்
* ஆல்கஹால்

இரைச்சல் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது
கண்களின் உணர்திறனும், செவி திறனும் குறிப்பிட்ட அளவு ஒலி, ஒளி திறனையே ஏற்றுக்கொள்ளும். இவற்றின் திறன் அதிகமாக இருக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலில், அதிக அலங்கார விளக்குகளைப் பார்க்கும் போது தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இரைச்சல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கும்போது தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக