Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

SBI வங்கி கணக்கில் தானாக வந்த பணம்; மோடி கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்!

 Image result for SBI



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது வங்கி கணக்கில் மாதம் மாதம் மர்மமான முறையில் பணம் தானாக வந்துள்ளது. 
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் பிரதமர் நரேந்திர மோடி தான் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு குடிமக்களுக்கு விநியோகிப்பதாக நம்பியுள்ளார். எனினும், அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை 
இதில் நகைச்சுவையான நிகழ்வாக, ஆலம்பூரில் உள்ள ஒரு எஸ்பிஐ கிளையின் மேலாளரான ராஜேஷ் சோன்கர், இரண்டு வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளார்.

ஹுக்கும் சிங் (ரூராய் கிராமத்தைச் சேர்ந்தவர்) மற்றும் ஹுக்கும் சிங் (ரோனி கிராமத்தைச் சேர்ந்தவர்) ஆகியோரின் பாஸ்புக்குகள் அவர்களின் புகைப்படங்களைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் இருவருக்கும் சரியான பொருத்தமாக இருந்துள்ளது. இதுவே ஒரே வங்கி கணக்கை இரண்டு பேர் வைத்துள்ளது போல் இருந்து வந்துள்ளது. 
இருவரும் ஒரே வங்கியில் கணக்கு ஆரம்பிக்க தனித்தனியாக வருகை தந்துள்ளனர். இதில், வங்கி கணக்கை ஆரம்பித்த ஹூக்கும் சிங்கில் ஒருவர் வேலை தேடி ஹரியானாவுக்கு சென்றுள்ளார். அங்கு தான் வேலை பார்த்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளார். 
ஆனால், மற்றொரு ஹூக்கும் சிங்கோ, தனது வங்கி கணக்கிற்கு மாதம் மாதம் பணம் வருவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். இது பிரதமர் மோடி தான் நாட்டு மக்களுக்கு அளிப்பதாக கூறிய பணம் என்று நினைத்து 6 மாதம் தொடர்ச்சியாக அவரும் கணக்கில் இருந்து ரூ.89,000 வரை எடுத்து செலவு செய்து வந்துள்ளார். 
0gledsio
ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங் பணம் எடுத்த விவரம்.


இந்நிலையில், கடந்த மாதம் (ரூராய் கிராமத்தை சேர்ந்த) ஹூக்கும் சிங், தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க சென்ற போது தான் அந்த கணக்கில் ரூ.35,400 மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அவரது கணக்கில் ரூ.1,40,000 இருந்திருக்க வேண்டும். இதையடுத்து, அவர் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். 
அதன் பின்னரே நடந்த இந்த குழப்பம் முழுவதும் அனைவருக்கும் தெளிவாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பணத்தை செலவு செய்த ஹூக்கும் சிங் கூறும்போது, வங்கி கணக்கிற்கு தானாக பணம் வந்ததும், மோடிஜி தான் பணம் தருகிறார் என்று நினைத்து அதனை செலவு செய்தேன். என்னிடம் பணம் இல்லை, எனக்கு அது தேவைப்பட்டது என்று அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக