இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பேய் என்றால் படையும் நடுங்கும். நம்ம ஊரில் சங்கிலிக்
கருப்பன், கொம்பன் அப்படி இப்படி ஏகப்பட்ட பேய்கள் உண்டு. இதைவிட பல சுவாரஸ்யமான
கதைகள் சர்வதேச அளவில் உண்டு. இந்தியாவுக்கு வெளியே உள்ள பேய்கள் எப்படி ?
அவற்றில் சுவாரஸ்யமான பத்து வகை பேய்கள் இந்த வாரம்.
1. பிளடி மேரி
வீட்டிலிருக்கும் விளக்கையெல்லாம் அணைத்து விடுங்கள். ஒரு
மெல்லிய மெழுகுவர்த்தி மட்டும் எரியட்டும். ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால்
நின்று கொண்டு “பிளடி மேரி” என்று மூன்று முறை சொன்னால் கண்ணாடியில் பேய் நின்று பல்லிளிக்கும்.
அப்படியே உங்கள் கண்களையெல்லாம் பிடுங்கிக் கொன்று விடும் என ஒரு திகில் பேய் மேலை
நாடுகளில் உலவுகிறது.
தனது பிள்ளைகளையெல்லாம் கொன்ற பேயாம் இது. பொதுவாக குழந்தைகள்
பாத்ரூமில் இருட்டில் நின்று இப்படிச் சொன்னால் பேய் வருமாம். கொஞ்சம்
வித்தியாசமான பேய் தான். இந்தப் பெயர் பிடித்துப் போனதால் தான் அமெரிக்காவில்
உற்சாகபான மிக்ஸ் ஒன்றுக்கு அந்தப் பேயின் பெயரையே வைத்து விட்டார்கள்.
2. பிளையிங் டச் மேன்
பேய்களில் மிகவும் வித்தியாசமானது இது. இது ஒரு கப்பல். ! ஆம்
கரையிலும் போகாமல் எப்போதும் கடலிலேயே இருக்கும் படி சாபம் வாங்கிய கப்பலாம்.
கப்பல் பயணிகளுக்குத் தான் இந்த பேயைக் கண்டால் பயம். அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி
கப்பல்களையே அமுக்கி விடும். அடப் போங்கப்பா இதெல்லாம் கடலில் தெரியும் கானல்
பிம்பங்கள் என சிலர் சொன்னாலும் பார்த்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள் வெளிச்சத்தோடு
வரும் இந்த கப்பலைப் பற்றிய கதைகளை !
பல பயணிகளின் குறிப்புகளில் இந்த கப்பல் இருக்கிறது.
இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இதை நேரடியாகப் பார்த்திருக்கிறார். சட்டென
தோன்றி வெளிச்சமாய் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து விடும் இந்தக் கப்பல். 16ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் ஆரம்பமான இந்த பேய்க் கப்பல் புராணம், இன்னும் பீதி கிளப்புவதை
நிறுத்தவில்லை. போய்க்கொண்டே இருக்கிறது.
3. பிளினி
கி.பி 50ல் இளைய பிளினி எனும் ஒரு பேய் மஹா அட்டகாசம் செய்தது.
கிரேக்க நாட்டின் முக்கிய நகரமான ஏதென்ஸில். அந்தப் பேய் சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேயின் அட்டகாசத்தை யாராலும் அடக்க முடியவில்லை.
மந்திரம், தந்திரம், வித்தைகள் எதுவுமே இந்தப் பேயின் முன்னால்
செல்லுபடியாகவில்லை. எந்த பாச்சாவும் பலிக்கவில்லையே என குழம்பிய மக்களுக்கு
ஒருவர் அறிவுரை சொன்னார். அதன்படி, அங்கிருந்த கல்லறைகளைத் தோண்டினார்கள். ஒரு
கல்லறையில் சங்கிலிகளுடன் கூடிய ஒரு எலும்புக் கூடைக் கண்டார்கள். அந்த எலும்புக்
கூட்டின் சங்கிலிகளை அவிழ்ந்து. மரியாதையுடன் மறு அடக்கம் செய்த பின் ஆவி
சந்தோசமாகிவிட்டதாம் ! அப்புறம் அந்த பிளினி பேயை யாரும் பார்க்கவில்லை.
பொதுவாகவே பண்டைய கிரேக்கர்களுக்கு பேய் நம்பிக்கை ஜாஸ்தி.
கல்லறைகளில் பேய் உலவும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நம்பினார்கள். பேய்கள்
வந்து நாட்டிலுள்ள மக்களைக் கொல்லாதிருக்க ஒரு ஏற்பாடு செய்தார்கள். அதாவது
ஆண்டுக்கு ஒருமுறை பேய்களுக்கு ஒரு மெகா விருந்து. எல்லா பேய்களுக்கும்
‘இன்விடேஷன்’ அனுப்பப்படும். இப்படி எல்லா பேய்களும் வந்து அந்த விருந்தைச்
சாப்பிட்டால் அடுத்த வருஷம் விருந்து வரும் வரை பேய்கள் ரெஸ்ட் எடுக்குமாம்
4.பா ஜியோ கை
பெயரைக் கேட்டாலே புரிந்திருக்கும் இது ஒரு சீன பேய் என்று.
சூதாடுபவர்களுக்கு இந்த பேயைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த பேய்களுக்கு
முருங்கை மரமல்ல, வாழை மரம் தான் ஃபேவரிட். அதன் கீழே தான் தங்கும். கையில் ஒரு
குழந்தையும் இருக்கும். திகில் கிளப்பும் இந்தப் பேயை விரட்ட ஒரே ஒரு வழி தான்
உண்டு. ஒரு நீளமான சிவப்புக் கயிறை எடுத்து, அதன் ஒரு முனையை வாழை
மரத்திலும், மறு முனையை நீங்கள் படுக்கும் கட்டிலிலும் கட்டவேண்டும். வாழை
மரத்தில் கயிறோடு சேர்த்து சில ஊசிகளையும் குத்தி வைக்கவேண்டும்.
இப்போது அந்தப் பேய் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில்
படுத்திருப்பவரிடம் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சும். அப்போது கட்டிலில்
படுத்திருப்பவர், விடுவிக்கிறேன் எனக்கு முதல் பரிசு விழப்போகும் லாட்டரி நம்பர்
சொல்லு என்றால் பேய் சரியாகச் சொல்லும் ! இது சீனா பேய். இப்படி சூதாட்ட
விஷயத்தில் எல்லா விஷயங்களையும் புட்டுப் புட்டு வைப்பதால் தைரியசாலி விளையாட்டு
வீரர்களுக்கு இந்தப் பேய் பணம் கொட்டும் பேய்.
சீனாவில் லூனார் காலண்டரின் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது
நாள் பேய் தினம் கொண்டாடுகிறார்கள். பேய்களுக்கு படைப்பது தான் இந்த தினத்தின்
ஸ்பெஷல். டயா டீ லோஸ் முரீடோஸ் என மெக்ஸிகர்கள் கொண்டாடுவதும் ஏறக்குறைய இதே
கான்சப்ட் தான் என்பது கூடுதல் தகவலுக்காக.
5. பேய் இரயில்
பேய், கப்பலாய் மட்டும் தான் வருமா ? ரயிலாய் வராதா ? என
கேட்பவர்களுக்காக இந்தப் பேய். இது ஒரு ரயில் பேய். ஒரு மாய ரயில். அவ்வப்போது
ஆங்காங்கே தெரியும் பேய் ரயில் இது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான்
இந்தக் கதைகள் பிரசித்தம். ஆளில்லாத, உடைந்த நிலையில், புதர் மண்டிக் கிடக்கும்
ரயில்வே டிராக்களில் திடுக் என தோன்றி தடதடத்து ஓடும் ரயில் இது. ஆபிரகாம்
லிங்கனின் நினைவு நாளில் இது அடிக்கடி தோன்றிய கதைகள் உண்டு. இந்த ரயில் போகும்
போது பக்கத்திலிருக்கும் எல்லா கடிகாரங்களும் நின்று விடும் என்பது ஜிலீர் சங்கதி.
இங்கிலாந்திலுள்ள ஒரு ரயில்வே லைன் மூடப்ப்பட்டு பல வருடங்கள்
கழிந்தபின் ஹாயாய் போயிருக்கிறது இந்தப் பேய், 1969ல். இந்தப் பேயைப் பிடித்துக்
கொண்டு ஏகப்பட்ட கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என
சம்பாதித்தவர்கள் பலர்.
6 நூ குய்
இந்தப் பேய் தான் பொதுவாக நாம் சினிமாக்களிலாவது பார்க்கின்ற
பேய். வெள்ளை உடை, நீள முடி உள்ள பெண் பேய். சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டே
செத்துப் போன பெண் தான் இப்படிப்பட்ட பேயாய் அலைவாள் என்பது சீனர்களின் நம்பிக்கை.
“வாழும்போது என்னை கொடுமைப்படுத்தினே இல்லே.. நான் பேயா வந்து
உன்னை என்ன பண்றேன் பாரு” என சவால் விடும் பேய்கள் இவை. பெண்கள் பாலியல்
வன்முறையினால் கொல்லப்பட்டால், அடக்கத்தின் போது குடும்பத்திலுள்ள எல்லோரும்
சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டு வருவார்கள். அப்படி வந்தால் இந்தப் பேய் சக்தியோடு
கிளம்பி தன்னைக் கொன்றவனைப் பழிவாங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
7. ரெஸரக்ஸன் மேரி
ஜெரி பாலஸ் என்பவர் ஒரு அழகிய பெண்ணை அழைத்துக் கொண்டு அவளுடன்
டேட்டிங் செய்தார். ஒரு நாள் முழுவதும் அவளுடன் ஆட்டம் பாட்டமென பொழுதைப்
போக்கினார். அவளுடைய கையைத் தொட்டால் ஐஸ் கட்டி மாதிரி இருந்தது, அது ஒன்று தான்
ஜெரிக்கு வித்தியாசமாய்ப் பட்டது. மாலையில், “சரி கிளம்பறேன், கொஞ்சம் டிராப்
பண்ணுங்க” என்று சொல்லி காரில் ஏறினாள். ஜெரி அவளை டிராப் பண்ண சென்ற போது வழியில்
குறுக்கிட்டது ஒரு கல்லறைத் தோட்டம். “ஜஸ்ட் ஒன் மினிட்” என்று சொல்லி காரைத்
திறந்தவள் சட்டென காணாமல் போய்விட்டார். கல்லறைத் தோட்டத்தின் கதவுகள் அசைந்தன.
மிரண்டு போய் வீட்டுக்கு வண்டியை பறத்திக் கொண்டு வந்தவரிடம்
மக்கள் சொல்லியிருக்கிறார்கள், “அடப்பாவி அது ரெஸரக்ஷன் மேரி பேய்டா.. இது கூட
தெரியாதா ?”. அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் மக்களை தொடர்ந்து
மிரட்டிக்கொண்டிருக்கும் பேய் இது. 1934ல் ஒரு விபத்தில் இறந்து போன போலந்து
நாட்டு இளம்பெண் தான் இந்தப் பேய் என ஒரு கதை உண்டு.
8.லா லோர்னா
லா லோர்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் அழுகின்ற பெண் என்று
பொருள். தான் விரும்பிய ஆடவனோடு சேர வேண்டும் என்பதற்காக தனது குழந்தைகளைக் கொன்று
விடுகிறாள் ஒரு பெண். ஆனால் பரிதாபம், அந்த ஆடவன் அவளை உதாசீனம் செய்து
விடுகிறான். கதிகலங்கிப் போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் தான்
இந்த பேய். அழுது கொண்டே, தனது குழந்தைகளைத் தேடித் திரியும் ஒரு அபலைப் பெண்ணின்
குரலாய் இந்தப் பேயின் குரல் இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி ஒலிக்கிறது.
சில நேரங்களில் தனியே நடந்து திரியும் குழந்தைகளை தன்
குழந்தைகள் என நினைத்து இந்தப் பேய் தூக்கிச் சென்றுவிடுவதும் உண்டு.
நெகிழவைக்கும் ஒரு தாயின் அழுகுரலும், அலைந்து திரியும் ஒரு பேயின் மூர்க்கமுமாக
இந்தப் பேய் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
9.ஆனி போலின்
எட்டாம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி தான் இந்த ஆனி. முதலாம்
எலிசபெத் ராணியின் தாய். அதி அற்புத அழகி. அவளுடைய ஒழுக்கத்தின் மீது
சந்தேகப்பட்ட கணவன் அவள் மீது இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி மரண தண்டனை
விதித்தான். வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும் என்பது தண்டனை. கண்கள் கட்டப்பட்ட
நிலையில் இருந்தாள் ஆனி. “என் வாளைக் காணோமே” என பேசிக்கொண்டே சரேலென தலையை
வெட்டினான் வீரன்.
ஆனி பேயானாள். இங்கிலாந்தில் அவளைப் பேயாய்க் கண்ட சாட்சிகள்
எக்கச்சக்கம். அழகிய பெண்ணாக அவளைக் கண்டவர்கள் பலர். தலையில்லாத முண்டமாய் அவளைக்
கண்டவர்கள் பலர். இதே மாதிரி தலையில்லாத இன்னொரு பேயும் உண்டு. அதன் பெயர் வூ டோ
குய். பொதுவா மரண தண்டனை விதிக்கப்பட்ட பேய்கள் தான் இவை. ராத்திரி கதவைத் தட்டி
“என் தலையைப் பாத்தீங்களா பாஸ்” என அப்பாவியாய் கேட்குமாம். சமயத்தில் கையில்
தலையை வைத்துக் கொண்டு “கொஞ்சம் பிக்ஸ் பண்ணுங்களேன் பிளீஸ்” என்றும் கேட்குமாம் !
10 த வயிட் லேடி
இது ஹைவே பேய். காரில் போய்க்கொண்டிருக்கும் போது ரோட்டின்
நடுவே சட்டென தோன்றி தலைவிரி கோலமாய் நிற்கும் பெண் இவள். பிலிப்பைன்ஸ் நாட்டில்
இந்தப் பேய் மிகப்பிரபலம். நடு நிசி தாண்டிய நேரத்தில் யாராவது தனியே பயணம்
செய்தால் சொல்லாமல் கொள்ளாமல் பின் சீட்டில் வந்து உட்காரும். அதற்காகவே இரவில்
வண்டி நிறைய ஆட்களை ஏற்றிக் கொண்டு தான் பயணம் செய்கின்றனர். இதெல்லாம் கட்டுக்கதை
என சிலர் சொன்னாலும், பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் இது உண்மை என்று கற்பூரம்
கொளுத்தாமல் சத்தியம் செய்கின்றனர்.
சரி கெட்ட பேய்களைப் பற்றி மட்டுமே சொன்னால் எப்படி, இதோ
கொசுறாக ஒரு நல்ல பேய். இதன் பெயர் புனியன். காடுகளில் தான் பொதுவா இது வசிக்கும்.
காட்டில் வழிதப்பிப் போனால் இந்தப் பேய் வந்து வழி சொல்லுமாம் ! . “ரைட் எடுத்து
லெப்ட் கட் பண்ணுங்க மெயின் ரோட் வந்துடும்.!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக