இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மும்பை ரயில் நிலையத்தில் பிரசவ வலியினால் துடித்த பெண் பயணிக்கு ஒரு ரூபாய் மருத்துவ குழுவால் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில்
நிலையங்களில் பயணிகளுக்காக ஒரு ருபாய் மருத்துவ குழு இயங்கி வருகிறது. அவசர கால மருத்துவ
சேவைக்காக பிரத்யேகமாக இயங்கும் இந்த குழு, ரயில் நிலையத்திலேயே உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்து விரைவான மருத்துவ சேவையை செய்து வருகிறது.
இன்று அதிகாலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் நெருல் ரயில் நிலையத்திலிருந்து பன்வேல் நகருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ரயில், பன்வேல் நிலையத்தை நெருங்கிய போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சக பயணிகள் ஒரு ரூபாய் மருத்துவ குழுவினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பன்வேல் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் இளம்பெண்ணை மீட்டு அங்கிருந்த மருத்துவ அறையில் பிரசவம் பார்த்தனர். இந்த சிகிச்சையில் அப்பெண் குழந்தையை நலமாக பெற்றெடுத்தார்.

Maharashtra: A woman,
travelling from Nerul to Panvel, gave birth to a child at Panvel railway station
earlier this… https://t.co/1RJyMTBDX7
— ANI (@ANI) 1574313173000
அதையடுத்து தாயும், சேயும் பத்திரமாக பன்வேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த ஒரு ரூபாய் மருத்துவ குழுவினரை மகாராஷ்டிரா அரசு வெகுவாக பாராட்டியுள்ளது.
இதுபோல கடந்த மாதமும் 29 வயதான இளம்பெண்ணுக்கு இக்குழுவின் மூலம் ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை ஈன்றார். மும்பை வழித்தடத்தில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைவு முதல் பிரசவ வலி வரையிலான அனைத்து விதமான அவசர சிகிச்சையும் ஆர்வமாக செய்து வரும் இந்த குழுவை மக்கள் அனைவரும் வரமாகவே கருதுகின்றனர்.
மும்பை மருத்துவ நிறுவனங்களின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஒரு ரூபாய் மருத்துவம் 24 மணி நேர சேவைக்காக இயங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக