இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram:
pudhiya.podiyan
Contact us :
oorkodangi@gmail.com
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி, இந்த 2109 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வோடபோன் ஐடியா மற்றும் பாரதி
ஏர்டெல் நிறுவனங்கள் ஆனது 49 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை இழந்துள்ளது. அதே நேரத்தில்
இவ்விரு நிறுவனங்களின் போட்டியாளரான - முகேஷ் அம்பானி தலைமையிலான - ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் 69.83 லட்சம் புதிய பயனர்களை அதன் நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது.
வயர்லெஸ்
சந்தாதாரர்களின் வளர்ச்சி!
ஆக மொத்த
வயர்லெஸ் சந்தாதாரர்களின் (ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ) எண்ணிக்கையானது
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியின் 117.1 கோடியிலிருந்து 2019 செப்டம்பர் மாத இறுதியில்
117.37 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 0.23 சதவீதம் என்கிற மாத வளர்ச்சியை
சந்தித்து உள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
தெரிவித்துள்ளது.
கெத்து
காட்டும் கிராமப்புறங்கள்; வீழ்ச்சி அடைந்த ஏர்டெல் & வோடபோன்!
நகர்ப்புறம்
மற்றும் கிராமப்புறம் என்கிற ஒப்பீட்டில், நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாவானது
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 65.91 கோடியாக குறைந்துள்ளது, அதே நேரத்தில்
கிராமப்புறங்களில் 51.45 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் டிராய் வெளியிட்டுள்ள
தரவுகளின்படி, பாரதி ஏர்டெல் நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்தில் 23.8 லட்சம்
பயனர்களை இழந்து அதன் மொத்த பயனர் எண்ணிக்கையை 32.55 கோடியாக குறைத்துக்
கொண்டுள்ளது. இதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனமானது செப்டம்பர் மாதத்தில் 25.7
லட்சம் பயனர்களை இழந்து அதன் மொத்த பயனர் எண்ணிக்கையை 37.24 கோடியாக குறைந்துக்
கொண்டுள்ளது.
ஜியோவின்
"வேற லெவல்" நிலைப்பாடு!
இவ்விரு
நிறுவனங்களின் போட்டியாளர் ஆன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த செப்டம்பர்
மாதத்தில் 69.83 லட்சம் பயனர்களைச் சேர்த்து, அதன் மொத்த பயனர் எண்ணிக்கையை 35.52
கோடியாக உயர்த்தியுள்ளது. செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி, வோடபோன் ஐடியாவின்
சந்தாதாரர் சந்தைப் பங்கு 31.73 சதவீதமாகவும், ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை பங்கு
30.26 சதவீதமாகவும், பாரதி ஏர்டெல் 27.74 சதவீதமாகவும் இருந்தது.
இந்த
பிஎஸ்என்எல் & எம்என்டிஎல் நிலை என்ன?
அரசாங்கத்திற்கு
சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை பொறுத்தவரை, எம்என்டிஎல்
ஆனது 8,717 பயனர்களை இழந்து, தற்போது 33.93 லட்சம் பயனர்களை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனமானது 7.37 லட்சம் பயனர்களைச் சேர்த்து அதன்
மொத்த சந்தாதார் தளத்தை 11.69 கோடியாக உயர்த்தியுள்ளது.
இதுவெறும்
ஆரம்பம் தான்!
இந்தியாவில்
வயர்லெஸ் டெலிடென்சிட்டி (தொலைபேசி அடர்த்தி) ஆனது ஆகஸ்ட் மாத இறுதியில் 88.77
லிருந்து செப்டம்பர் இறுதியில் 88.90 ஆக உயர்ந்துள்ளது என்றும் டிராய்
தெரிவித்துள்ளது. இந்த "கடந்த மாதங்களின் கணக்கெல்லாம் " ஒருபக்கம்
இருக்க, வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன்
ஐடியா நிறுவனங்களானது தங்களது கட்டண விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
மறுகையில் உள்ள ஜியோவும் அடுத்த சில வாரங்களில் புதிய விலைகளை அறிவிப்போம் என்று
கூறியுள்ளது. அதன் பின்னரே "புதிய கணக்கு" ஒன்று உருவாகும் என்பதை இங்கே
நினைவூட்ட விரும்புகிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக