ஜியோவின்
அறிமுகத்தின் போது ஏர்டெல் சற்று தடுமாறியது, பின்னர் சுதாரித்து கொண்ட ஏர்டெல்
ஜியோவின் பாணியை பின்பற்றி ஜியோவை போன்றே விலை நிர்ணயம் மற்றும் நன்மைகளை வழங்க
தொடங்கியது. இருந்தாலும் கூட ஜியோவின் வளர்ச்சியை ஏர்டெல் நிறுவனத்தினால் தடுக்க
முடியவில்லை. அம்பானியின் அத்துணை திட்டங்களும் சரியாகத்தான் போய் கொண்டிருந்ததது
- இனிமேல் ஜியோ இலவச அழைப்புகள் கிடையாது ஏற்கிற அறிவிப்பு வரும் வரையில்!
வாய்ப்பை
சரியாக பயன்படுத்தும் ஏர்டெல்!
இந்த
அறிவிப்பு ஆனது ஜியோ தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாக பயனர்களை கருத
வைத்தது; இதை விட நல்ல திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறதா என்கிற தேடலை தூண்டியது.
இந்த இடத்தில் தான் "ஜியோவிற்கு சமமான விலை மற்றும் நன்மைகள் கொண்ட"
ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்கள் கைகொடுக்க தொடங்கியது.
ஆம்!
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த அத்துணை ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு சமமான
திட்டங்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாம் கீழ
காணவுள்ள ஏர்டெல் திட்டங்களானது ஜியோவின் ஆல் இன் ஒன் திட்டங்களுக்கான சிறந்த
மாற்றாக கூட செயல்பட முடியும். ஒருவேளை நீங்கள் ஜியோவின் சேவையை புறக்கணிக்க
விரும்பினாலோ அல்லது ஜியோவிற்கான சிறந்த மாற்றாக ஏர்டெல் நிறுவன திட்டங்களை தேடினாலோ...
இதோ உங்களுக்கான திட்டங்கள்!
ஜியோவின்
ரூ.149 ஆல் இன் ஒன் vs ஏர்டெல்!
ரிலையன்ஸ்
ஜியோவிடம் இருந்து கிடைக்கும் ரூ.149 முதல் ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டத்திற்கு
சரியான போட்டியாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169 ப்ரீபெய்ட் திட்டம்
திகழ்கிறது. ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டமானது 24 நாட்கள் செல்லுபடி, ஒரு
நாளைக்கு 1.5 ஜிபி அளவிலா டேட்டாவை வழங்க, மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ.169
ப்ரீபெய்ட் திட்டமானது - கொஞ்சம் அதிக விலை என்றாலும் கூட - 28 நாட்கள் செல்லுபடி
மற்றும் 28 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இது ஐ.யூ.சி கட்டணத்தையும்
வசூலிக்கிறது, அதாவது சந்தாதாரர்கள் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள என்று
அர்த்தம். அதேசமயம், ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டமானது 300 நிமிட ஐ.யூ.சி
அழைப்புகளை வழங்குகிறது.
ஜியோவின்
ரூ.222 ஆல் இன் ஒன் vs ஏர்டெல்!
ரிலையன்ஸ்
ஜியோவின் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், இது ஒரு
நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 1000 ஐயூசி நிமிட அழைப்புகள் மற்றும் பிற சலுகைகளை
வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான சரியான மாற்றாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின்
ப்ரீபெய்ட் திட்டமான ரூ.249 திகழ்கிறது. இது ரூ.27 என்கிற அளவிலான கூடுதல் செலவை
உங்களுக்கு வழங்கினாலும் என்றாலும் கூட ஜியோ வழங்கும் அதே 2 ஜிபி டேட்டா நன்மையை
வழங்குகிறது, தவிர எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்திடமிருந்து ரூ .4 லட்சம்
மதிப்பிலான ஆயுள் காப்பீடு என்கிற தனித்துவமான நன்மையையும், ஷா அகாடமியில் 4
வாரங்களுக்கான இலவச கோர்ஸையும் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் ஐ.யூ.சி
எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இல்லை.
ஜியோவின்
ரூ .333 ஆல் இன் ஒன்vs ஏர்டெல்!
ரிலையன்ஸ்
ஜியோவின் ரூ.333 ப்ரீபெய்ட் திட்டத்தை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ .349 ப்ரீபெய்ட்
திட்டத்தால் மாற்ற முடியும். ரூ.333 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி
அளவிலான டேட்டாவை மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல்
ரூ.349 திட்டமானது கொஞ்சம் வேறுபடுகிறது. இது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான
டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. தவிர ஏர்டெல் பயனர்களுக்கான ஷா
அகாடமி மற்றும் பிற ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் இந்த திட்டத்தின் வழியாக அணுக
கிடைக்கிறது.
ஜியோவின்
ரூ.444 ஆல் இன் ஒன் vs ஏர்டெல்!
ஜியோவின்
ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ஒரு நல்ல போட்டியாக ஏர்டெல் ரூ 448 ப்ரீபெய்ட்
திட்டம் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் திட்டத்தை பொறுத்தவரை, இந்த திட்டம் 84
நாட்கள் செல்லுபடியாகும், மேலும் 1,000 ஐ.யூ.சி நிமிடங்களுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி
அளவிலான டேட்டாவையு அனுப்புகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ 448 ப்ரீபெய்ட்
திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை மொத்தம் 82 நாட்கள் என்கிற
செல்லுபடியுடன் வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தின் நன்மை முற்றிலும் தடையின்றி,
எந்தவொரு நெட்வொர்க்குக்கும் கூடுதல் செலவுகள் இல்லாமல் வரம்பற்ற அழைப்புகளை
மேற்கொள்ளலாம்.
ஜியோவின்
ரூ.555 ஆல் இன் ஒன் vs ஏர்டெல்!
கடைசியாக,
ஜியோவின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டத்தை மாற்ற, பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின்
ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இது ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை விட
ரூ.56 குறைவாக செலவாகிறது மற்றும் மிகவும் ஒத்த நன்மைகளை வழங்குகிறது. ரிலையன்ஸ்
ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை 84 நாட்களுக்கு
வழங்குகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி
அளவிலான டேட்டாவை மொத்தம் 82 நாட்களுக்கு வழங்குகிறது. அழைப்பு நன்மையை
பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ அதன் சந்தாதாரர்களுக்கு 3,000 ஐ.யூ.சி நிமிடங்களை
வழங்குகிறது, ஏர்டெல் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக