இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தங்கத்தில்
முதலீடு செய்ய விரும்பும் பலருக்கும், வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என்ற விவரம்
தெரிவதில்லை. தங்கத்தைப்போலவே விலை ஏறி இறங்கும் வெள்ளியிலும், முதலீடு செய்து
வருமானம் ஈட்ட முடியும். வெள்ளியில் முதலீடு செய்வது எப்படி?
இன்றைய
காலகட்டத்தில், வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பது, சேமிக்கும் பணத்தை
எதிலேனும் முதலீடு செய்வது என்கிற விழிப்புணர்வு ஏழைகள் முதல் பணக்காரர் வரை
பெருகிவருகிறது. முதலீட்டு முறை குறித்து அதிகம் தெரியாதவர்கள், வங்கிகளில் வைப்பு
நிதியாகவோ, சேமிப்புக்கணக்காகவோ முதலீடு செய்து, மிகக்குறைந்த சதவிகிதத்தை
வட்டியாகப் பெற்றுவருகிறார்கள். அதையும் தாண்டி கூடுதல் வருமானம்
எதிர்பார்ப்பவர்கள், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்
என்று பல்வேறுவிதமான முதலீடுகளை நாடுகிறார்கள்.
தங்கத்தில்
முதலீடு செய்ய விரும்பும் பலருக்கும், வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என்ற விவரம்
தெரிவதில்லை. தங்கத்தைப்போலவே விலை ஏறி இறங்கும் வெள்ளியிலும், முதலீடு செய்து
வருமானம் ஈட்ட முடியும்.
``புல்லியன்
முதலீடு என்று சொன்னாலே அதில் தங்கம் மற்றும் வெள்ளி அடக்கம். பெரும்பாலும் அபூர்வ
உலோகங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கத்தைத்தான் தேர்வு செய்வார்கள்.
பணவீக்கத்தைச் சரிசெய்யக்கூடிய முதலீடாகத் தங்கத்தைக் கருதுகிறார்கள். மேலும்,
உலகப்பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் காலகட்டத்தில் பாதுகாப்பான
முதலீடாகத் தங்கத்தைக் கருதுகிறார்கள். தங்கத்தைப்போலவே வெள்ளியும் முதலீட்டுக்கான
முக்கிய அபூர்வ உலோகமாகும்.
வெள்ளியைப் பொறுத்தவரை, அபூர்வமான
உலோகம் என்ற எல்லையைத் தாண்டி, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய முக்கிய
உலோகமாகவும் இருக்கிறது. எனவே, வெள்ளியின் தேவையென்பது, உலகப் பொருளாதார
வளர்ச்சியைப் பொறுத்து கூடலாம் அல்லது குறையலாம்.
தங்கத்துக்கும்
வெள்ளிக்குமான உறவு
தங்கத்திற்கும்
வெள்ளிக்கும் இடையே விலை அடிப்படையிலும் ஓர் உறவுமுறை உண்டு. அதாவது ஒரு அவுன்ஸ்
தங்கத்தின் விலையை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையோடு ஒப்பிடுவார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1000 டாலர் என்று
எடுத்துக்கொள்வோம். அதே நேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 20 டாலர் என்று
எடுத்துக்கொள்வோம். இரண்டுக்கும் உள்ள உறவுமுறை என்று சொன்னால், தங்கத்தின்
விலையான 1000 டாலரை, வெள்ளியின் விலையான 20 டாலரால் வகுத்தால் நமக்கும் 50 என்ற
எண் வரும். இதைத்தான் 50:1 என்று அழைப்பார்கள். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
மாறும்போது, இந்த விகிதாசாரமும் மாறும். அதன் அடிப்படையில் மலிவாக இருக்கும்
உலோகத்தை வாங்குவதும், விலை கூடுதலாக உள்ள உலோகத்தை விற்பதும் வியாபாரிகளின்
விற்பனை உத்தி.
தற்போதைய
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைப் பார்க்கலாம். நவம்பர் 2019 கான்டிராக்ட்
தங்கம், ஒரு அவுன்ஸ் $1516 என்ற விலையிலும், வெள்ளி ஒரு அவுன்ஸ் $18 என்ற
விலையிலும் வியாபாரம் ஆகிறது. இப்போது உள்ள விலையில் 1515/18 = 84 என்று வருகிறது.
இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் பார்த்தால், மதிப்பு கூடும்போது வெள்ளி விலை
மலிவானதாகவும் தங்கம் விலை கூடுதலாகவும் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. விகிதாசார
மதிப்பு குறையும்போது வெள்ளி விலை கூடுதலாகவும் தங்கம் விலை குறைவாகவும் இருப்பதாக
மதிப்பிடப்படுகிறது.
வெள்ளியில்
முதலீடு
இந்தியாவில்
வெள்ளியில் முதலீடு செய்வதாக இருந்தால், அதை வெள்ளி நாணயங்களாகவோ அல்லது அதிக
மதிப்பில் வாங்குவதாகவோ இருந்தால், வெள்ளிக் கட்டிகளாகத்தான்
வாங்கவேண்டியிருக்கும். இப்போது உள்ள விலையை சராசரியாக எடுத்துக்கொண்டால் ஒரு கிலோ
வெள்ளி ரூ.47,000/- என்ற மதிப்பிலும், தங்கம் 10 கிராம் ரூ.37,000/- என்ற
விலையிலும் உள்ளது. அதாவது, 12 கிராம் தங்கம் வாங்கி லாக்கரில் வைப்பதற்கும், ஒரு
கிலோ வெள்ளிக்கட்டியை லாக்கரில் வைப்பதற்கும் உள்ள இடத்தேவையையும் புரிந்துகொள்ள
வேண்டும்.
ஸ்பாட்
மார்க்கெட்டில் வெள்ளியை வாங்கி லாக்கரில் சேமித்து வைப்பது என்பது ஒரு வழிமுறை.
வெள்ளியை மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மூலம் நீண்ட கால கான்ட்ராக்டில் வாங்கி
வைத்திருந்து விற்பது இன்னொரு வகை. இந்த வகையில் செய்வதால் டெலிவரி எடுக்காமல்
அப்படியே விற்று லாபத்தை எடுக்கலாம் அல்லது இந்த வகை ஆன்லைன் வியாபாரத்திலும்,
கான்ட்ராக்ட் முடியும் தறுவாயில் டெலிவரி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளி
MCX-ல் 2019 வருடம் என்று எடுத்துகொண்டால், ஒரு கிலோ வெள்ளி குறைந்தபட்ச விலை
ரூ.35,887/- என்ற அளவிலும், அதிகபட்சமாக ரூ.51,500/- என்ற அளவிலும் இருந்தது. இது
43% ஏற்றம் ஆகும். 2018-ம் வருடம் இதே கணக்கின் அடிப்படையில் 19% அளவு ஏற்றத்தைக்
கண்டது. 2017-ம் ஆண்டு இதே கணக்கின் அடிப்படையில் 24% ஏற்றத்தைக் கண்டது. எனவே,
சந்தையில் பெரும் இறக்கம் வரும்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வது போலவே
வெள்ளியிலும் முதலீடு செய்து லாபம் பெறலாம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக