Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

டெல்லி வன்முறை: ஸ்தம்பித்தது சந்தை.. ரூ.1500 கோடி இழப்பு!

டெல்லி வன்முறை: ஸ்தம்பித்தது சந்தை.. ரூ.1500 கோடி இழப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக டெல்லியில் கொந்தளிப்பாக உள்ளது… இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன… இதன் காரணமாக தலைநகரில் வர்த்தகம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது…. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகுதிகளில் வன்முறைகள் காரணமாக சந்தையில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை விரைவில் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என்றால், டெல்லியில் உள்ள சந்தைகளின் வணிகம் மோசமடையும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சில்லறை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, டெல்லியின் மொத்த சந்தைகளும் ஸ்தம்பித்துள்ளது. இதில் மிகப்பெரிய தாக்கம் மொத்த சந்தைகளில் தான் காணப்படுகிறது. டெல்லயிலிருந்து பிற மாநிலங்களுக்கு வியாபாரிகள் பல்வேறு  பொருட்களை வாங்கிச் செல்வர். ஆனால் டெல்லியில் அமளி தொடங்கியதிலிருந்து, பிற மாநிலங்களின் வணிகர்கள் இங்கு வருவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார்கள்… ஐந்து நாட்களுக்குள் டெல்லி சந்தையில் 60 சதவீத வியாபாரம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜாமியா மற்றும் சீலாம்பூர்-ஜாஃபராபாத் வன்முறைகள் மற்றும் ஜாமா மஸ்ஜித் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக  வணிகர்கள் டெல்லிக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.  கலவரம் நடக்கும் பகுதிகளை ஒட்டி சாந்தினி சௌக், பாகீரத் பிளேஸ், சதர் பஜார், சீதா, எம் பஜார், சாவடி பஜார், டரிபா, குச்சமஹாஜனி, நயா பஜார் மற்றும் பஹர்கஞ்ச் போன்ற பெரிய சந்தைகள் உள்ளன… இவை டெல்லியின் மிக முக்கியமான மொத்த சந்தைகள் ஆகும். இப்போது வெளி மாநிலங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் இங்கு வருவதை நிறுத்திவிட்டார்கள்… வன்முறையில் சிக்கிக் கொள்ளும் அச்சத்தில் உள்ளூர் வாடிக்கையாளர்களும் இந்த சந்தைகளுக்கு செல்வதைத் தவிர்க்கிறார்கள்… இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகையில், டெல்லியில் தினசரி 500 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். போராட்டங்களுக்கு பின்னர் இது 60% குறைந்துவிட்டது. 
டிசம்பர் 15 அன்று ஜாமியா வன்முறைக்குப் பிறகு, டிசம்பர் 20 வரை குறைந்தது ரூ.1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு டெல்லியில் நடக்கக்கூடிய விருந்து போன்ற கேளிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.
சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால் அதை நம்பிப் பிழைக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. சந்தைப்பக்கம் வாடிக்கையாளர்கள் எட்டிப்பார்க்காத நிலையில் அனைத்து தரப்பினரும் பிரச் னைகளை எதிர்கொள்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக