Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 21 டிசம்பர், 2019

உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி..


மிழகத்தில் நடைபெற உள்ள ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 2,31,000 பேருக்கும் அதிகமானோர் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த 27 மாவட்டங்களில் 91,975 பதவியிடங்களுக்கு 3,02,994பேர் மனு தாக்கல் செய்தனர். பின்பு அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

48,891 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக