வடகிழக்கு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைபெய்து
வருகிறது.இதனால் பல மாவட்ட பள்ளிகளுக்கும் , கல்லூரிகளுக்கும் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
கோவை மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த நாட்களாக கனமழை பெய்து
வருகிறது. இதைஅடுத்து நடூர் என்ற இடத்தில் உள்ள ஏடி காலனியில் நான்கு வீடுகள்
இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் உறங்கிக்
கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
We are saddened by the loss of life, livelihoods and
property due to heavy rains in Tamil Nadu. My deepest condolences to the
bereaved families. We express our solidarity to the affected and stand ready to
support them.
—
Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 2, 2019
தகவல்
அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பொது
மக்களின் உதவியுடன் 17 பேரின் உடல்கள் மீட்டனர். வீடு இடிந்து விழுந்த 17
உயிரிழந்ததற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டரில் இரங்கல்
தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா அரசு உதவ தயாராக
இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக