இன்று
நீங்கள் பார்க்கப்போகும் நபர் உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகும் ஒருவர்.
ஆம்,
இவர் தனது வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறக்கவில்லை, அது நன்மையானதாக
இருந்தாலும் சரி தீமையானதாக இருந்தாலும் சரி… இவரின் மூளையில் அனைத்தும்
பதிவாகியுள்ளது. முன்னர் நடந்த சம்பவத்தைப்பற்றி கேட்டால் உடனே பதில்
அளிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளார்.
யோசித்துப்பாருங்கள், இவரின் மனதில் எத்தனை எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருக்குமென. இவரால் எதையுமே மறக்க முடியாது.
Jill
Price (ஜில் பிறைஸ்) என்ற 47 வயது பெண்மனியே இந்த திறனைக்கொண்டுள்ளவர் ஆவார்.
அமெரிக்காவைச்சேர்ந்த இவர் சிறுவயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிமிடத்தையும் இவரால் கூறமுடிகிறது.
உதாரணமாக, ஒரு பழைய தொலைக்காட்சித்தொடரின் 30 செக்கன் வீடியோக்காட்சியை ஒளிபரப்பிவிட்டு, அது எப்போது ஒளிபரப்பானது என்று கேட்டால் உடனே அந்த தொலைக்காட்ச்சித்தொடர் ஒளிபரப்பான நாளை சொல்லிவிடுகிறார். (வீடியோவைப்பார்க்க. )
இவரின்
இத்திறனை வெளியுலகிற்குகொண்டுவந்தவர், டொக்டர் Sawyer ஆவார்.
தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்று சொன்னதும் முதலில் நம்ப மறுத்த டொக்டர், ” எப்போது இளவரசி Grace (கிறேஸ்) இறந்தார் ?” என்று பிரபலம் இல்லாத ஒரு கேள்வியைக்கேட்டார். உடனே “செப்டம்பெர் 14, 1982 அன்று எனது 12 ஆம் வகுப்பின் முதல் நாள்” என்று மிகச்சரியான பதிலைச்சொன்னார் பிறைஸ்.
அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஏன் அவருக்கு மட்டும் அப்படியொரு திறன் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக