ஏற்கனவே பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவையை தொடங்குவதற்கான அத்துணை வேலைகளையும் தீயாக செய்து கொண்டு வருகிறது. இந்நிலைப்பாட்டில் ஏர்டெல் மற்றும் ஜியோவை விட மலிவான விலையில் ஒரு புதிய 2ஜிபி டேட்டா திட்டமொன்றையும் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது தொழில்துறையில் உள்ள
அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களிலும், அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார்
நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மட்டுமே இன்னும் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை
உயர்த்தவில்லை. வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட மற்ற
அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களும் இந்தியாவில் நிலவும் தொலைத் தொடர்புத் துறையின் சூழ்நிலைகளுக்கு
அடிபணிந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்.
இந்நிலைப்பாட்டில் "கேப்பு கிடைக்கும் எல்லா இடத்திலும் ஆப்பு வைப்பது போல" பிஎஸ்என்எல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த திட்டமானது மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது முதல் ஆச்சரியம்!
இரண்டாவது ஆச்சரியம் என்னவென்றால் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.200 க்குள் குறைவாக உள்ளது. மற்ற டெலிகாம் நிறுவனங்களானது 56 நாட்கள் செல்லுபடியாகும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.350 என்கிற விலை வரம்பில் வழங்கி வருகிறார்கள் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். சரி வாருங்கள் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் துல்லியமான விலை என்ன? அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்!
பிஎஸ்என்எல்-இன் புதிய டேட்டா வவுச்சரின் விலை & நன்மைகள்:
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய டேட்டா வவுச்சரின் விலை ரூ.197 ஆகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை அதன் சந்தாதாரர்களுக்கு அனுப்புகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 54 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன் நிறுவனத்தின் PRBT நன்மையையும் சந்தாதாரர்கள் பெறுவார்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அழைப்பு நன்மைகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் vs ஏர்டெல்:
ஒப்பிடுகையில், தனியார் தொலைதொடர்பு ஆப்ரேட்டர்கள் 56 நாட்கள் செல்லுபடியாகும் தங்களது திட்டங்களை ரூ.399 மற்றும் ரூ.400 க்கும் அதிகமான விலையில் வழங்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு பாரதி ஏர்டெல் நிறுவனமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை 56 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது, அதன் விலை ரூ.399 ஆகும். இந்த ஏர்டெல் திட்டத்தில் அழைப்பு நன்மைகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட, இது பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டாவை (2ஜிபி) விட குறைவான டேட்டாவையே வழங்குகிறது, அதுவும் இரு மடங்கு விலையில்!
பிஎஸ்என்எல்-ன் மற்றொரு பெஸ்ட் டேட்டா வவுச்சர்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.548 டேட்டா வவுச்சர் ஆனது ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை அனுப்புகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும். டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டம் வேறு எந்த நன்மையையும் வழங்காது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிஎஸ்என்எல்-ன் சிறந்த (வாய்ஸ் & டேட்டா) ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ஒருவேளை நீங்கள் வாய்ஸ் மற்றும் டேட்டா ஆகிய இரண்டையும் அனுப்பும் ப்ரீபெய்ட் திட்டங்களை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ரூ.939 அல்லது ரூ.448 போன்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.939 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 80 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவையும், 250 நிமிட அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. உடன் பிஆர்பிடி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற கூடுதல் நன்மையையும் வழங்குகிறது.
மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
இது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவையும், 250 நிமிட அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக