Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

மீண்டும் சிக்கியது Flipkart; ஐபோனுக்கு பதிலாக "ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட" ஆண்ட்ராய்டு போன் டெலிவரி!

ம்மாத தொடக்கத்தில் கண்ணூரைச் சேர்ந்த ஒருவருக்கு கேமராவிற்கு பதில் டைல்ஸ்களை டெலிவரி செய்த ஃப்ளிப்கார்ட் தற்போது ஐபோன் 11 ப்ரோவிற்கு பதிலாக எதை டெலிவரி செய்துள்ளது என்பதை நீங்களே பாருங்களேன்!

பிரபல இகாமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் ஒரு "போலியான டெலிவரி" பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட், பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கு போலியான ஐபோனை டெலிவரி செய்துள்ளதாக ஆன்லைனில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ரஜனி கந்த் குஷ்வா என்பவர் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவை ஆர்டர் செய்துள்ளார். அந்த போனிற்கான முழுத் தொகையையும் (தள்ளுபடிக்கு பிறகு ரூ.93,900) அவர் செலுத்தி உள்ளார். மேலும் அவர் விரைவான டெலிவரியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் தனது கனவு ஸ்மார்ட்போனைப் பெறுவதற்கு பதிலாக, ஒரு போலியான ஐபோனை பெற்றுள்ளார்.

பெட்டியைத் திறக்கும்போது, ரஜனி கந்த் குஷ்வா ஐபோன் போல தோற்றமளிக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுள்ளார். ஆனால் அது ஒரிஜினல் ஐபோன் 11 ப்ரோ அல்ல என்பதை அடுத்த நொடியே கண்டுபிடித்து, அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனெனில் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட "ஐபோன் 11 ப்ரோவின்" மூன்று பின்புற கேமராக்கள் ஆனது உண்மையான கேமரா அமைப்பு அல்ல, அது வெறும் ஸ்டிக்கர் தான என்பதை ரஜனி கந்த் குஷ்வா கண்டறிந்துள்ளார். இந்த தகவலை ஐபி டைம்ஸ் (IBTimes) தெரிவித்துள்ளது.

டெலிவரி செய்யப்பட்ட போலியான சாதனம் ஒரு ஐபோன் எக்ஸ்எஸ் போல தோற்றமளித்தாலும், அது உண்மையில் வேறுபட்ட இயக்க முறைமையின் கீழ் இயங்குகிறது உடன் ஆண்ட்ராய்டு ஆப்களையும் கொண்டுள்ளது என்பது மற்றொரு கொடுமை!

இந்த தகவலை அறிந்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த போலி ஐபோனுக்கு பதிலாக ஒரிஜினல் ஐபோன் 11 ப்ரோ ஆனது விரைவில் மாற்றப்படும் என்று குஷ்வாவுக்கு உறுதியளித்துள்ளது. இருப்பினும் கூட இந்த கட்டுரையை நாங்கள் பதிவிடும் இந்த தருணம் வரையிலாக அவர் இன்னும் அந்த போலி ஐபோனைத்தான் கையில் வைத்துள்ளார்.


ஃப்ளிப்கார்ட் "ஏமாற்று" டெலிவரிகள்:

இதுபோல ஒரு வாடிக்கையாளர், ஃப்ளிப்கார்ட்டில் எதையாவது ஆர்டர் செய்வதும், அதற்கு பதிலாக வேறு எதையாவது பெறுவதும் முதல் முறை நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. இந்த மாத தொடக்கத்தில் கண்ணூரைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் ரூ.27,500 மதிப்புள்ள கேமராவை ஆர்டர் செய்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு பெட்டி டைல்ஸ் தான் அவருக்கு கிடைத்தன. கொடுமையான விடயம் என்னவென்றால், அனுப்பட்ட டைல்ஸ்களோடு குறிப்பிட்ட கேமராவின் கையேடு மற்றும் உத்தரவாத அட்டையும் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக