தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை
அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். 293 எம்பிக்கள்
ஆதரவும், 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.
இந்நிலையில் இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். இந்த தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து விவாதிக்க 293 எம்பிக்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர். தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு என நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக