ஆந்திர அரசு உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை
ரூ.25 விற்பனை செய்து வருகிறது. நீண்ட நேரம் வரிசையில் முண்டியடித்து கொண்டு
சென்றபோது சாம்ப்பய்யா என்பவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா,
கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி
செய்யப்படும் ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக
பாதித்தது. இதனால் இந்தியா முழுவதும் பல நகரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை
எட்டியது.
வெங்காயத்தின்
விலை அதிகபட்சமாக ரூ. 200 வரை விற்பனை செய்யபட்டு வருகிறது. இதனால் வெங்காய விலையை
கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து
ஆந்திர அரசு தங்கள் மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25 விற்பனை செய்து வருகிறது.
உழவர்
சந்தைகளில் விற்கப்படும் வெங்காயத்தை பொது மக்கள் தினமும் வாங்கி செல்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் குவிந்தது. நேற்று அதிக
கூட்டம் வந்ததால் சுமார் மூன்று கிலோமீட்டர் வரிசையில் நின்று தலா ஒரு கிலோ
வெங்காயத்தை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
இந்நிலையில்
விஜயவாடாவில் வெங்காயம் வாங்க வந்த சாம்ப்பய்யா என்பவர் நீண்ட நேரம் வரிசையில்
நின்று கொண்டு இருந்தபோது பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு சென்றபோது சாம்ப்பய்யா
உயிரிழந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக