Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை


கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி


குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கூடுதல் டி.ஜி.பி ரவி பேட்டி
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி ரவி கூறுகையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம் என கூறினார். ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருப்பதும் அதோடு அது தொடர்பான, 'லிங்க்'களை பதிவிறக்கம் செய்வதும் குற்றமாகும் என கூறினார்.
'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம் மற்றும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். இவர்களுக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறினார்.
ஆபாச படம் பார்த்தவர்கள் சென்னையில்தான் அதிகம்
குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில், சென்னையில் அதிகம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்கள் வீடியோக்கள் பார்த்து இருப்பது தெரியவந்துள்ளது.
வீட்டின் முகவரியோடு அனுப்பிவைக்கப்படும்
அதோடு, அவர்கள், எதன் மூலமாக வீடியோக்கள் மற்றும் படங்களை பார்த்தனர் என்பதையும் கண்டறிந்துள்ளோம். அவர்களின் புகைப்படம், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை, அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்
சிறைதண்டனை மற்றும் கவுன்சிலிங்
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் படம் பார்த்தவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு, 'கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்துள்ளோம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி ரவி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக