Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

நான் ஒரு புறம்போக்கு, பரதேசி: நித்யானந்தா

நித்யானந்தா தன்னை புறம்போக்கு, பரதேசி என அழைத்துக்கொண்டு அதற்கு புதிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.


குழந்தை கடத்தில், பாலியல் துன்புறுத்தல் என பல குற்றச்சாட்டுகளில் காவல்துறையினர் நித்யானந்தாவைத் தேடிவர அவரோ எந்தவித பதற்றமுமில்லாமல் வீடியோ வெளியிட்டுவருகிறார்.

நித்யானந்தா நேற்று வெளியிட்ட வீடியோவில் தனக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது என்று கூறியுள்ளார். “சர்வதேச மாஃபியா என்னை தாக்க முயற்சிக்கிறது. பல்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல் என் மீதும் என் சங்கத்தின் மீதும் தொடுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு யூகங்கள் வகுக்கப்படுவதும் பணம் வாரி இறைக்கப்படுவதும் தொடர்கிறது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச சமூகம் கவனித்து வருகிறது. என்னையும் எனது சங்கத்தையும் கடவுளே நேரடியாக களமிறங்கி காத்துவருகிறார்” என்று நித்யானந்தா கூறினார்.

தினமும் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் புது புது கெட் அப்களில் வந்துகொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் மிரண்டுபோய் இருப்பதாகவும் நித்யானந்தா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

“என்னை யாரும் சொந்தம் கொண்டாடமுடியாது ஏனென்றால் நான் ஒரு புறம்போக்கு. நானும் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை, ஏனென்றால் நான் ஒரு பரதேசி. பரத்தை தேசமாக கொண்டவன் பரதேசி” என புது விளக்கத்தையும் அளித்துள்ளார்.

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் என்ற நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவை வாங்கியுள்ள நித்யானந்தா, அதை தனி நாடாக அறிவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கைலாசா என அந்த தீவுக்கு பெயரிட்டு தனது சிஷ்யைகளுடன் அங்கு இருக்கிறார் என கூறப்படுகிறது.
 
நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ஆசிரமமும் சோதனையிடப்பட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக