Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

சாம்சங் & ஆப்பிளை மிரட்டும் போதைப்பொருள் கூட்டம்; வெறும் ரூ.25,000 க்கு Foldable ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது!


ப்லோ எஸ்கோபரின் சகோதரரான ராபர்டோ எஸ்கோபார் ஒரு புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளார். எஸ்கோபார் போல்ட் 1 என்று அழைக்கப்படும் இந்த புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது பிரபல சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட்போன் மூலம் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. ராபர்டோ எஸ்கோபார் என்பவர் ஒரு "பிரபலமற்ற" போதைப்பொருள் கூட்டத்தின் தலைவர் ஆன பப்லோ எஸ்கோபரின் சகோதர் ஆவார். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக இவர் தனது சொந்த flamethrower (ஃப்ளேமேத்ரோவர்) ஒன்றை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் மற்றும் ஆப்பிளுக்கு நேரடி சவால்!

இவர் அறிமுகம் செய்த எஸ்கோபார் போல்ட் 1 ஸ்மார்ட்போனானது சந்தையில் உள்ள மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களைப் போலவே ஒரு நெகிழ்வான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மடங்கும் முன் டேப்ளெட் போலா காட்சியளிக்கும் இந்த சாதனம் மடக்கிய பின்னர் ஒரு ஸ்மார்ட்போன் அளவிற்கு கைக்கு அடக்கமாக உள்ளது. ஆனால் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ராபர்டோ எஸ்கோபார் தனது இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங்கிற்கு எதிராக திருப்பாமல் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக களமிறக்க திட்டமிட்டுள்ளார் மற்றும் அவரின் இந்த திட்டத்திற்கு ஏற்றபடி தான் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் விலை நிர்ணயமும் உள்ளது!

எஸ்கோபார் போல்ட் 1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை:


டிஜிட்டல் டிரண்ட் அறிக்கையின்படி, எஸ்கோபார் போல்ட் 1 ஸ்மார்ட்போனின் விற்பனையானது, முதலில் 1,00,000 யூனிட்டுகள் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும். இதன் 128 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.25,100 என்றும், மறுகையில் உள்ள இதன் 512 ஜிபி மாடல் ஆனது சுமார் ரூ.35,800 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது எஸ்கோபரின் வலைத்தளம் வழியாக பிரத்தியேகமாக விற்கப்படும் என்பது கூடுதல் சுவாரசியம்.
சில்லறை விற்பனையாளர்களுக்கு வேலை இல்லை!
“நான் ஆப்பிளை வெல்வேன் என்று பலரிடம் கூறியுள்ளேன். நெட்வொர்க்குகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை நான் தவிர்க்கிறேன், இதன் வழியாக எனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் 349 டாலர்களுக்கு என்னால் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விற்க முடியும். இதே மாதிரியான ஸ்மார்ட்போன்கள் ஆனது சாம்சங் போன்ற நிறுவனத்தினால் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிளை வெல்வதே எனது குறிக்கோள், நான் எப்போதும் இருப்பதைப் போலவே இருப்பதின் மூலமாக வெல்வேன்” என்றும் டிஜிட்டல் டிரெண்ட்டிற்கு எஸ்கோபார் தெரிவித்துள்ளார்.
டிஸ்பிளே, ப்ராசஸர், ரேம் மற்றும் ஓஎஸ்!
மிகவும் மலிவான போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன எஸ்கோபார் போல்ட் 1 ஆனது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 855 மொபைல் பிளாட்பாரம் கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு பை உடனாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB அல்லது 512GB அளவிலானா உள்ளடக்க சேமிப்பிடத்தை கொண்டுள்ளது. இது வெளிப்புற மெமரி ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தையும் ஆதரிக்கிறது. இதன் டிஸ்பிளேவை விரிக்கும் போது, இது 7.8 இன்ச் அளவிலான AMOLED முழு HD+ தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேவாக (4: 3 அளவிலான திரை விகிதம்) மாறுகிறது. மடிந்திருக்கும் போது இதன் டிஸ்பிளே அளவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை.
கேமராக்கள், பேட்டரி!
இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது அதில் 16 மெகாபிக்சல் + 20 மெகாபிக்சல் என்கிற கேமரா அமைப்பு உள்ளது, இந்த அமைப்பானது முன் மற்றும் பின்புற கேமராவாக செயல்படுகிறது. இந்த கேமரா அமைப்பானது டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவையும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. தவிர இதில் கைரேகை சென்சார், டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட் மற்றும் சார்ஜிங்கிற்காக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளும் உள்ளது. இது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 134 மிமீ x 190.35 மிமீ x 7.6 மிமீ மற்றும் 320 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ரூ.164,999 மதிப்பிலான கேலக்ஸி போல்ட் உடன் ஒப்பிடுகையில், இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது மிக மிக மலிவான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக