புதுச்சேரியில்
உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் ஃபைபர் படகு மூலம் மீன்பிடிக்க ஏற்றிச்
சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் 30 அடி நீளம் கொண்ட உருளை வடிவில் பொருள்
ஒன்று சிக்கியுள்ளது.
உடனே
மீனவர்கள் அந்த உருளை 4 படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வந்துள்ளனர். பின்னர்
மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை
அதிகாரிகள் அந்த உருளையை சோதனை செய்தனர். அப்போது அந்த உருளை ராக்கெட்டுக்கு
தேவையான எரிபொருள் நிரப்பி செல்லும் பொருள் என தெரியவந்துள்ளது.
ராக்கெட்
மேலே செல்ல ராக்கெட்டை சுற்றி மொத்தம் ஐந்து எரிபொருள் நிரப்பி உருளைகள் இருக்கும்
இந்த உருளைகளை தான் தீயைக் கக்கிக்கொண்டு ராக்கெட்டை மேலே எடுத்துச் செல்லும்
எரிபொருள் முடிந்தவுடன் இந்த உருளைகள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நடுக்
கடலில் விழுந்து விடும்.
அப்படி
விழுந்த ஒரு உருளைதான்.தற்போது கடல் சீற்றத்தால் கரைப்பகுதியில்
வந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து
இஸ்ரோ அதிகாரிகள் தகவல் கொடுக்கப்பட்டது.அதற்கு அவர்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்
பக்கங்கள் தான் என அவர்கள் தெரிவித்தனர்.
இது
குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கடலில் மீன் பிடிக்க சென்றபோது தங்கள்
வலையில் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் பாகம் சிக்கியதாகவும் , இந்த பிஎஸ்எல்வி
பாகத்தை நான்கு படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.பிஎஸ்எல்வி பாகத்தை
இழுத்து வரும் போது ஐந்து வலைகள் மற்றும் படகுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் , ஒரு
வலையின் விலை 80 ஆயிரம் என்பதாலும் படகுகள் சேதமடைந்துள்ளதாலும் நஷ்ட ஈடாக 10 லட்ச
ரூபாய் மீனவர்கள் கேட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக