ஆந்திரா சட்ட பேரவையில் தற்போது குளிர்கால
கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை 3
வாரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன்
ரெட்டி உறுதி.
இந்தியாவில்
பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண்
கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற
சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட
குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதால் போலிசாரால் சுட்டு கொலை
செய்யப்பட்டனர்.
இந்த
சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைள் நாடுமுழுவதும்
துரிதப்படுத்தபடுத்தப்படுகின்றன. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,
தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பேசும்போது, பாலியல் குற்றங்கள்
குறித்து விவாதம் நடைபெற்றது.
இது
குறித்து, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், இனி பெண்கள் பாலியல்
குற்றசாட்டுகள் கூறினால் உடந்தையாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
அப்படி விசாரித்து, உடனே விசாரணை தொடக்கி 3 வாரத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக