ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோகன கிருஷ்ணனுக்கு நேற்று
முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம்
செய்துகொள்வதாக கூறி வரதட்சணை வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திர
மாநிலம் கர்னூல் மாவட்ட நந்தியால் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன்.
இவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம்
நடைபெறுவதற்காக வேலைகள் திருமண நாளுக்கு முந்தைய நாளில் தீவிரமாக நடைபெற்றன.
அந்த
நேரம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து ஒரு பெரிய அதிர்ச்சி புகாரை
தெரிவித்தனர். அதாவது, இந்த மாப்பிள்ளை, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம்
செய்துகொள்வதாக கூறி அதற்காக 60 லட்சம் ரொக்கமும், 60 கிராம் நகையும்
வாங்கிவிட்டார். ஆனால் திருமணம் செய்யாமல் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டார் என புகார்
எழுந்தது.
உடனே
இதுகுறித்து புதிய மணப்பெண் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார்
இந்த புகார் குறித்து தற்போது புது மாப்பிள்ளையை விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக