Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பீகாருக்கு பறந்த உத்தரவு ! 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன ?

பீகாருக்கு பறந்த உத்தரவு ! 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன ?



பாலியல் வழக்கில் தொடர்பு உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது.தற்போது பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு 10 தூக்கு கயிறுகளை தயாரித்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கடந்த சில  நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பிரியங்காவை எரித்து கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் சுட்டு கொன்றனர்.இதனால் பலரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இது போன்று தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கு இடையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் கருணை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றவகையில் தான் பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு உத்தரவு ஓன்று  பிறப்பிக்கபப்ட்டுள்ளது.அதாவது ,10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ஆம் தேதிக்குள் தயாரித்து தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.பல சிறைகளில் தூக்கு  தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், ஒரு சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.அதில் ஓன்று தான் பக்சர் சிறை.இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது  தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக