நாட்டின்
முன்னணி எரிபொருள் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை
எப்படியேனும் தனியார்மயம் ஆக்குவோம் என அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதை
எப்படியேனும் நாங்கள் தடுத்தே தீருவோம் என அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.
நாட்டில்
நிலவி வரும் மந்த நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை
அதிகரிக்கவும், சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க போவதாக அரசு கடந்த
சில மாதங்களாக அரசு முயன்று வருகிறது.
மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு
இந்த
நிலையில் நாட்டின் முன்னணி எரிபொருள் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனம், தனியார் வசம் சென்றால் எரிபொருள் விலை மற்றும் அதன் பணியாளர்கள்
தரப்பில் பெருத்த கவலையை ஏற்படுத்தியது. இதனால் அதன் நிர்வாகிகள் தரப்பில் பெரும்
எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் முக்கிய தொழில் துறை அமைப்புகளால்
வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
தனியார்மயமாக்க ஒப்புதல்
பிரதமர்
நரேந்திரமோடி தலைமையிலான அரசு, கடந்த மாதம் பாரத் பெட்ரோலியம் உள்பட ஐந்து
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது அதன்
பங்குகளை விற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இது பல தசாப்தங்களில்
இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தனியார்மயமாக்கல்; நடவடிக்கையாக இருக்கும் என்றும்
கூறப்படுகிறது.
மந்த நிலையை போக்க உதவும்
இந்த
தனியார்மயம் நடவடிக்கையானது நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்கவும், நிதியை
உட்செலுத்தவும், நிதி பற்றாக்குறையை போக்கவும் ஒரு சிறந்த வழியாக
கருதப்படுவதாகவும் மத்திய அரசின் தரப்பில் முன்னரே கூறப்பட்டது. இதனால்
இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையை போக்க முடியும் எனவும் மத்திய அரசு
நம்புகிறது.
வேலை இழப்பு இருக்கலாம்
எனினும்
தனியார்மயமாக்கல் திட்டத்தில் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களையும் மத்திய அரசு
அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் பல ஆயிரம் பேர் வேலை இழப்பு பயந்து இந்த, பங்கு
விற்பனையை எதிர்க்கின்றனர் என்றும் கருதப்படுகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய
எரிசக்தி வழங்குனரான, ஒரு பெரிய நிறுவனத்தை தனியார்வசம், அதுவும் வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு வழங்குவது, லாபம், கொடுங்கோன்மை மற்றும் மூலதனத்தை பறிப்பது
போன்றது. என்றும் எண்ணெய் பொதுத்துறை நிறுவன அதிகாரிகளின் கூட்டமைப்பு மற்றும்
மஹாரத்னா அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உற்பத்தி திறன்
நடப்பு
நிதியாண்டில் மார்ச் காலாண்டு அறிக்கையின் படி, நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய்
சுத்திகரிப்பாளாரான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளையும்
கட்டுப்பாட்டையும் விற்க மோடி அரசாங்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது. மேலும்
மஹாராஷ்டிரா மற்றூம் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்று பெரிய
சுத்திகரிப்புஇ நிலையங்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 7,02,000
பேரல்கள் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் திறன் கொண்டது என்றும்
கூறப்படுகிறது.
எதிர்கட்சிகளும் எதிர்ப்பு
மத்திய
பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியானது இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும்
கூறப்படுகிறது. இதே கேரளா முதலமைச்சரும் இந்த திட்டமானது ஊழியர்களின் வேலை இழப்பு
காரணமாகலாம் எனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மத்திய அரசோ தனியார் மய நடவடவடிக்கையானது நுகர்வோருக்கு பயனளிக்கும்,
நிறுவனங்களுக்குள் போட்டியை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள்
கிடைக்குமா?
1971ம்
ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்கு பின்பு இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
தேசியமயமாக்கப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு பெட் ரோலிய பொருட்களின் நியாயமான
மற்றும் சமமான வினியோகத்தை வழங்குவதற்கும், ராணுவத்திற்கு தேவையான பொருட்களைப் பாதுகாப்பதற்கும்
உதவியது. மேலும் பாரத் பெட்ரோலியம் சுமார் 80 பில்லியன் ரூபாய்களை இலவச எரிவாயு
திட்டங்களுக்காக செலவிட்டுள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்கள் பெரும் பலன் அடைந்தன.
அரசின் சேவையை செய்ய முடியுமா?
ஆனால்
நாட்டின் மிகப் பெரிய இத்தகைய சேவையை செய்த ஒரு பொதுத்துறை நிறுவனம் செய்த வேலை
தனியார் நிறுவனம் செய்ய முடியுமா? இது நடக்க கூடிய ஒரு செயலா? இது நடைமுறைக்கு
ஒத்துவருமா ? என்றும் அதிகாரிகள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. உண்மை தானே.
பொதுத்துறை நிறுவனம் தனியார்மயம் ஆனால் ஏழை மக்களுக்கு கிடைத்து வரும் இந்த சலுகையானது
மீண்டும் கிடைக்குமா? விலைவாசி சமச்சீராக இருக்குமா? ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை
அனுதினமும் ஏற்றம் கண்டு வரும் நிலையில் இது எங்கே போய் முடியும் என்று தான்
தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக