Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 டிசம்பர், 2019

என்ன? 500GB டேட்டா பிளானின் விலை இவ்ளோதானா? குருநாதா BSNL.. இவ்ளோ நாளா எங்க இருந்த?


 Image result for BSNL
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம். ஆனால் பிஎஸ்என்எல் தான் இந்திய பிராட்பேண்ட் சந்தையில் தற்போது மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நிறுவனம் என்பதையும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சில பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது மிகவும் கவர்ச்சிகரமானவைகள் என்பதையும், பிஎஸ்என்எல் நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆப்ரேட்டராக இருப்பதையும் பெரும்பாலான சந்தாதாரர்கள் மறந்தே விட்டார்கள். அதை அனைவர்க்கும் நினைவூட்டும் வண்ணம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 500ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமொன்றை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
மீண்டும் களமிறங்கிய 500ஜிபி பிளான்!
ஆம்! சில மாதங்களுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்ட ரூ.777 பிராட்பேண்ட் திட்டமானது மீண்டும் அறிமுகமாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் பயனர்கள் சில கவர்ச்சிகரமான நன்மைகளை அனுபவிக்க முடியும். அதென்ன நன்மைகள்? இந்த ரூ.777 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தை போன்றே பெரிய அளவிலான டேட்டா நன்மையை வழங்கும் மற்ற பிஎஸ்என்எல் திட்டங்கள் என்னென்ன? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
பிஎஸ்என்எல் ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:
 இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து பேசுகையில், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.777 பிராட்பேண்ட் திட்டமானது 50 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் வரும் என்பதையும், இந்த திட்டமானது மாதத்திற்கு 500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதையும் சந்தாதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகமானது 2 Mbps ஆக குறைக்கப்படும். இது மட்டுமல்லாமல், சந்தாதாரர்கள் இந்தியா முழுவதுமான அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மையை பெறுவார்கள். இதுவொரு விளம்பர திட்டம் என்பதால், மேலே கூறப்பட்டுள்ள நன்மைகள் அனைத்துமே புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்!
ரூ.777 பிராட்பேண்ட் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
 அறிவிக்கப்பட்டுள்ள ரூ.777 பிராட்பேண்ட் திட்டமானது அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. எனவே, ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்யும் சந்தாதாரர்கள் தங்களது 6 மாத சந்தா காலத்திற்குப் பிறகு, 600GB CUL பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டால்? - இப்போது ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்யும் சந்தாதாரர்களுக்கு, 600 ஜிபி சியூஎல் பிராட்பேண்ட் திட்டதட்டின் மாத செலவானது ரூ.999 ஆக இருக்கும்.
ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தையும் கவனத்தில் கொள்ளலாம்!
ரூ.999 பிராட்பேண்ட் திட்டமானது 600 ஜிபி சியூஎல் பிராட்பேண்ட் திட்டம் என்று பிரபலமாக அறியப்படும் ஒரு பிஎஸ்என்எல் திட்டமாகும். இந்த திட்டமானது 80 எம்.பி.பி.எஸ் வேகத்தில்லானா டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் மொத்த டேட்டா வரம்பானது மாதத்திற்கு 600 ஜிபி ஆகும். இந்த வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகமானது 2 Mbps ஆக குறைக்கப்படும். தவிர இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 24 மணிநேர வரம்பற்ற அழைப்பு நன்மையையும் இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் வழங்குகிறது.
மற்ற பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்:
மீண்டும் அறிமுகமாகியுள்ள ரூ.777 பிராட்பேண்ட் திட்டமானது அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே நேரலையில் இருக்கும், அதன் பிறகு சந்தாதாரர்கள் தானாகவே ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதை விரும்பாத பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு மற்ற சில தேர்வுகளும் உள்ளன. அதில் ஒன்று தான் பிஎஸ்என்எல் ரூ.1,299 பிராட்பேண்ட் திட்டமாகும். இது 100 எம்.பி.பி.எஸ் வேகத்திலான 800 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 2 Mpps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
800 ஜிபி பற்றாதா? அப்போ உங்களுக்கு 3500 ஜிபி தான் செட் ஆகும்!
ஒருவேளை உங்களுக்கு 800 ஜிபி அளவிலான டேட்டா போதாது என்றால், நீங்கள் ரூ.1,699 பிராட்பேண்ட் திட்டத்தையும் தேர்வு செய்யலாம், இது அதே 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது, ஆனால் இதன் டேட்டா வரம்பு மாதத்திற்கு 1100 ஜிபி ஆகும். மற்ற திட்டங்களை போலவே இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 2 Mpps ஆக குறைக்கப்படும் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பட்டியலில் மேலும், ரூ.1,999, ரூ.2,999 மற்றும் ரூ.4,999 போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன, இவைகள் முறையே மாதத்திற்கு 1400 ஜிபி, 2000 ஜிபி மற்றும் 3500 ஜிபி அளவிலான டேட்டாவையும் மற்ற பிராட்பேண்ட் திட்டங்களில் வழக்கமாக காணப்படும் நன்மைகளையும் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக