Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 டிசம்பர், 2019

விலையை குறைக்க மறுத்த ஊழியருக்கு விழுந்த அடி உதை…!!! ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்…

 Image result for police slap
சென்னையில் கடை ஊழியரை தாக்கிய ஆயிரம் விளக்கு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜபாண்டி இவர் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு விசாரணை சம்மந்தமாக சென்றுள்ளார்.

அப்போது விசாரணையை முடித்து விட்டு மாலில் உள்ள சுலேகா என்ற கடைக்கு சென்று பொருட்களை வாங்கி அதன் விலையை குறைத்து கேட்கும் போது ஊழியர்களுக்கும் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஊழியர்களை ராஜபாண்டி தாக்கியுள்ளார்.

இதனால் கடையின் உரிமையாளர் கடை ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகளை பதிவு செய்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராஜபாண்டியை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக