சீனாவை
மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார பொருள் உற்பத்தி நிறுவனமான
பிஒய்டி தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
தமிழகத்தின்
பக்கம் முதலீடுகளை கவர்கின்ற வகையிலான முயற்சியில் முதலமைச்சர் பழனிசாமி
தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, முதலமைச்சர் மற்றும்
முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் அரசு முறை பயணமாக வெளிநாடு
சென்றிருந்தனர்.
தொடர்ந்து,
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் உலக முதலீடு மற்றும் தேர்ச்சி
மேம்பாட்டு மாநாடு ஒன்று கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
தமிழக
அரசின் இந்த முயற்சிகளின்மூலம் இதுவரை 5,027 கோடி ரூபாய்க்கான முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன்மூலம் மாநிலத்தில் 20,351 பேருக்கு புதிய வேலை
வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிஒய்டி 2,800
ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
பிஒய்டி
நிறுவனம் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் மிகமுக்கிய
நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதால்
சுமார் 11,500 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது,
தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ், டிரக் மற்றும் வேறு சில வாகனங்களையும் தமிழகத்தில்
தயாரிக்க இருக்கின்றது. இது மட்டுமின்றி, செல்போன்களுக்கு தேவையான பொருட்கள்,
சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் அதனை சார்ஜ் செய்ய தேவையான உபகரணங்கள்
உள்ளிட்டவற்றை அது தயாரிக்க இருக்கின்றது.
தொடர்ந்து,
மின் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் பொருட்கள் மற்றும் ரெயில் டிரான்ஸிட்
உள்ளிட்ட பொருட்களையும் அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
உலக
முதலீட்டாளர்கள் மாநாட்டில் 9 நிறுவனங்களுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவினை பிஒய்டி நிறுவனம் எடுத்துள்ளது.
இத்துடன், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏத்தர் எனர்ஜி, ஐடிசி பேப்பர்போர்டு,
மிட்சுபா சிக்கால், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்
தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
இதில்,
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் ஒசூரில் அமையவுள்ள மின் வாகனங்கள் மற்றும்
லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையால் 4,321 பேருக்கு வேலை வாய்ப்பு
உருவாக உள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ரூ. 635.4 கோடி முதலீடு செய்ய இருக்கின்றது.
தொடர்ந்து,
மிட்சுபா சிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு
சக்கர வாகனங்களுக்கான கூறுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை விரிவுபடுத்த சுமார்
503.6 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 330 வேலை வாய்ப்புகள் உருவாக
இருக்கின்றது.
மேலும்,
ஐ.டி.சி பேப்பர் போர்டு மற்றும் ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் குழுமம் ரூ. 515 கோடி
முதலீட்டில் ஒரு காகித உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்துடன்,
பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை தயாரிக்க
டேட்டா பேட்டர்ன் ரூ. 50 கோடி முதலீடு செய்ய இருக்கின்றது.
மேலும்,
குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்வதற்காக ரூ. 175 கோடி
முதலீடு செய்ய உள்ளது...
ஸ்ரீவாரி
எனர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப்ப மற்றும் காற்றாலை எரிசக்தி
உற்பத்திக்கான கட்டமைப்பு கூறுகளை தயாரிக்க ரூ. 250 கோடி முதலீடு செய்ய
இருக்கின்றது. எஸ்.என்.எஃப் காம்பனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் புல்
மெஷின்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டுமான உபகரண ஆலையில் ரூ. 98 கோடி முதலீடு செய்ய
உள்ளது.
இதேபோன்று
அரசும் அதன் சார்பில் ரூ. 60 கோடி செலவில் மூன்று திறன் மேம்பாட்டு மையங்களை
அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்த முயற்சியில்
ஓர் பங்காளியாக டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோ, ஆட்டோ கூறுகள் மற்றும் இயந்திர
கருவிகளுக்கான அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக