Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

அடேங்கப்பா...! லாட்டரியில் கிடைத்த ரூ6 கோடி பணத்தில் நிலம் வாங்கியவருக்கு அடுத்த அதிஷ்டம்...!


கேரளாவில் லாட்டரியில் விழுந்த பணத்தை வைத்து நிலம் வாங்கியவருக்கு அடுத்த அதிர்ஷ்டமாக அவர் வாங்கிய நிலத்திலிருந்து புதையல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரத்ன காரன் பிள்ளை என்ற 66 வயது முதியவர் கடந்த 6 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்துள்ளார். இந்த லாட்டரியில் அவருக்கு அதிர்ஷ்டவசமாக ரூ6 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது.

இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட ரத்ன காரன் பிள்ளை அதைப் பயன்படுத்தி ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக அவர் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தில் அவர் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.

அந்த நிலத்தில் மரவள்ளிக்கிழங்கை விளைவிக்க எண்ணி நிலத்தைத் தோண்டி கிழங்கைப் பயிர் செய்து வந்துள்ளார். அப்பொழுது தோண்டும் போது ஒரு இடத்தில் ஏதோ பானை தட்டுப்படும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற ரத்ன காரன் அதை முழுவதுமாக தோண்டி பார்த்த போது அதில் ஒரு பானையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்கள் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 20.4 கிலோ எடை கொண்ட இந்த புதையலில் 2595 நாணயங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொல்லியல் துறை ஆய்வாளர்களுடன் வந்து அதைச் சோதனை செய்ததில் அந்த நாணயங்கள் 1885ம் ஆண்டு திருவாங்கூரைக் கடைசியாக ஆட்சி செய்த ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மாவின் நாணயங்கள் எனவும் இந்த நாணயங்கள் 1949ம் ஆண்டு வரை பயன்பாட்டிலிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த புதையல் தற்போதுஅரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது ரத்ன காரன் பிள்ளையின் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதால் அவருக்கு சட்டப்படி அரசு சன்மானம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்து நிலத்தை வாங்கியவருக்கு நிலத்திலும் புதையல் கிடைத்த சமாச்சாரம் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துவிட்டது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக