பி.இ படித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வு
எழுதலாம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள
மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவார்களாம்.
இன்ஜினியரிங்
பட்டபடிப்பான பி.இ பட்டத்தை பெற்றவர்கள், இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என
அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித
ஆசிரியருக்கு உண்டான ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பங்கேற்கலாம்.
அதில்
தேர்ச்சி பெறுபவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராக
பணியமர்த்தப்படுவார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.இ படிப்பிற்க்கும் சமநிலை
அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சில
வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட் படிப்பை படிக்க
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பி.இ
பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த இட ஒதுக்கீடு 5 சதவீதமாக
குறைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக