சென்னையை
சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது
அவரது வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்ததாக
மருத்துவர்கள் கூறினர். அவரது வயிற்றில் ஒன்று , இரண்டு நீர்க்கட்டிகள் இல்லாமல்
மொத்தம் 759 நீர் கட்டிகள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர்
வயிற்றில் இருந்த அனைத்து நீர்க்கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள்
நீக்கினர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , வயிற்றில் நீர்க்கட்டிகள்
வளரும் போது எந்தவித அறிகுறியும் தெரியாது. நீர்க்கட்டிகள் வளர்ந்த பின்னே
கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதிலும் வயிற்றுக்குள்ளே நீர்க்கட்டிகள்
உடைந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீர்க்கட்டிகள்
வராமல் இருப்பதற்கு சுத்தமான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள்
கூறியுள்ளனர். நாய் , ஆடுகள் உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக கைகளை
நன்கு சுத்தம் செய்த பின் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக