கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 9கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம் தான் மணக்குடி பாலம்.
சிறப்புகள் :
அலைக்கடல் கொஞ்சும் கன்னியாகுமரியில் மேற்குத்திசை நோக்கி கடல் அழகுகளைப் பார்த்தவாறு சென்றால் நம் மனதை கொள்ளை கொள்ளும் மணக்குடி அமைந்துள்ளது.
இந்தப் பாலம் மணக்குடி கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றுச் சொல்லலாம்.
மணக்குடி பாலம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்த பாலத்தின் மீது நின்றுக் கொண்டு சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இப்பாலத்தில் தமிழ் மற்றும் மலையாளப் சினிமாப் படங்களை படம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணக்குடி பாலத்தின் கரையில் நின்றுக் கொண்டு கடலில் இருந்து எழும் அலைகளையும், அந்த இடத்தில் சூழ்ந்திருக்கும் அலையாத்தி மரங்களையும், மேலும் மாதா கோவில்கள், அங்கு அமைந்திருக்கும் புல் இனங்கள் நம்மை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் உற்சாகமாக சுற்றிப் பார்ப்பதற்கு படகு சவாரியும் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு சென்றால் அலையாத்தி மரங்களையும், உப்பளத்தின் காட்சிகளையும், மீன் கூட்டங்கள், நாரைக் கூட்டங்களின் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
மணக்குடி கடற்கரை பகுதியில் குழந்தைகள் உற்சாகமாக மனம் மகிழ மணல் வீடுகளை கட்டி விளையாடலாம். மேலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழலாம்.
இவற்றை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு கடைசியாக கலையழகு புனித ஆண்ட்ரு ஆலயத்தைச் சென்றுப் பார்க்கலாம்.
எப்படிச் செல்வது?
வடச்சேரி மற்றும் அண்ணாப் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்கவேண்டிய இடங்கள் :
மணக்குடி கடற்கரை.
புனித ஆண்ட்ரு ஆலயம்.
படகு சாவரி.
அலையாத்திக் காடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக