Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

 Related image
குரு சந்திர யோகம் :

குருவும், சந்திரனும் ஒன்று, ஒன்பது மற்றும் பத்தாம் இடங்களில் இணைந்து வருவது குரு சந்திர யோகம் ஆகும்.

குரு சந்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

புகழ், கீர்த்தி மற்றும் தனம் கொண்டவராக இருப்பார்கள்.

தெய்வபலம் மிகுந்தவராகவும் இருப்பார்கள்.

சசி மங்கள யோகம் :

செவ்வாயும், சந்திரனும் இணைந்தோ அல்லது சம சப்தமமாகவோ மகரம், மேஷம் மற்றும் கடகம் போன்ற இடங்களில் நின்றால் சசி மங்கள யோகம் உண்டாகும்.

சசி மங்கள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

மனை யோகம் உண்டாகும்.

சாக்த யோகம் :

குருவுக்கு ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டில் சந்திரன் இருந்தால் சாக்த யோகம் உண்டாகும்.

சாக்த யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் ஏற்ற இறக்க நிலைகள் அடிக்கடி மாறும்.

சுனபா யோகம் :

சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் அமைவுகள் உண்டானால் சுனபா யோகம் உண்டாகும்.

சுனபா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் அதிக வாய்ப்புகள் நிறைந்தவைகளாக அமையும்.

அயை யோகம் :

சந்திரனுக்கு பனிரெண்டாம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் அமைவுகள் உண்டாயின் அயை யோகம் உண்டாகும்.

அயை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் சிறந்த பலன்கள் அமையும்.

துருதுரா யோகம் :

சந்திரனுக்கு இரண்டு, எட்டு மற்றும் பனிரெண்டாம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் அமைவுகள் உண்டாயின் துருதுரா யோகம் உண்டாகும்.

துருதுரா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் மேன்மையான நிலையுடன் வாழ்வார்கள்.

சந்திராதி யோகம் :

சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் புதன் சுக்கிரன் அமைவுகள் உண்டாயின் சந்திராதி யோகம் உண்டாகும்.

சந்திராதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் கலைகள் மற்றும் இன்பத்துடன் வாழ்வார்கள்.

கத்திரி யோகம் :

குருவும், சந்திரனும் இரண்டு மற்றும் ஐந்தாம் இடங்களில் இணைவு பெறுவது கத்திரி யோகம் எனப்படும்.

கத்திரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

வாழ்க்கையில் முன்னேற்றமின்மை சூழல் அமையும், செய்தொழிலால் விரயங்கள் உண்டாகும்.

ஜெய யோகம் :

ஆறாம் அதிபதி நீசம் பெற்று பத்தாம் அதிபதி உச்சம் பெற்றால் உண்டாவது ஜெய யோகம் ஆகும்.

ஜெய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

போட்டி பந்தயங்களில் கீர்த்தி உடையவர்.

நீண்ட ஆயுள் உடையவர்.

வாத திறமையால் வெற்றி பெறுவார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக