ஆந்திர
பிரதேசத்தில் குடும்ப ரேஷன் அட்டையில் இயேசுநாதர் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம்
சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஆந்திர
பிரதேசத்தில் குடும்ப ரேஷன் அட்டையில் இயேசு கிறிஸ்துவின் உருவப்படம்
அச்சிடப்பட்டதுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில்
இதுகுறித்து ஆந்திர அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
வத்லமாறு
பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், குடும்ப ரேஷன்
அட்டையில் இயேசுநாதர் புகைப்படத்தை அச்சிட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பி
வருகிறார். அந்த நபர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.
கடந்த
2016ம் ஆண்டு அதே நபர் தனது குடும்ப ரேஷன் அட்டைகளில் சாய் பாபாவின் உருவத்தையும்,
2017-18ம் ஆண்டில் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். இந்த செயலுக்கு அவர்
மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக