பேஸ்புக்,
டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க
முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கும் கணக்குகள் 20 சதவீதம் போலியானவை எனவும், ஆதலால் அதனை கண்டுபிடிக்க ஆதார், பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் எனவும் டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ”ஆதார் பான் எண்களை சமூக வலைத்தள கணக்குடன் இணைப்பது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது, இது போன்ற சட்டங்களை மத்திய அரசு தான் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளது.
மேலும் அனைத்து தகவல்களும் வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கிறது “ எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக