ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்
- தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது.
- வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும். வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30
தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி
அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள்
மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஒரு வழியாக பல
மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர்
27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில
தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும். வேட்புமனுத்தாக்கல்
தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல்
டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடைபெறும் என்று மாநில தேர்தல்
ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக