Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 2 டிசம்பர், 2019

நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்!



 அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூ ஆர்லியன்ஸின் '700 block of Canal Street' என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணி வரை இடம்பெற்றுள்ளதாக நியூ ஆர்லியன்ஸ் போலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்த 5 பேர் நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனைய 5 பேர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகபடியான சனத்தொகை இருந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள நியூ ஆர்லியன்ஸ் போலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!