தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு
மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம்
ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்" என்று
அழைக்கப்படுகிறது.
சிறப்புகள் :
கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு
சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும்
கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
தூத்துக்குடியில் ஒரு அனல் மின்
நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர்
போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா
மற்றும் ரோச் பூங்கா போன்றவை.
இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன்
ஆராய்ச்சி நிலையத்தை (CMFRI) தன்னகத்தே கொண்டுள்ளது. உப்பு உற்பத்தியிலும் சிறந்து
விளங்குகிறது.
இதன் அருகிலேயே ஒரு பூங்கா
அமைந்திருக்கிறது. மக்கள் இங்கு மாலை நேரங்களில் கடற்கரை காற்று வாங்கி
புத்துணர்ச்சியுடன் உலாவ முடியும். இன்று இந்த பூங்கா பிரபலமான சுற்றுலாத்தலமாக
உள்ளது.
மேலும் இத்துறைமுகம் தமிழகத்தின்
இரண்டாவது துறைமுகமாகவும் உள்ளது. இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக
பிரசித்தமாக அறியப்படுகிறது.
இங்கு மாலை நேரங்களில் குடும்பத்துடன்
சென்றுவர ஏற்ற இடமாகும்.
எப்படி செல்வது?
அனைத்து நகரங்களிலிருந்தும்
தூத்துக்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
தூத்துக்குடியில் பல்வேறு
கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
துறைமுகம்.
கடற்கரை.
பூங்கா.
இதர சுற்றுலாத்தலங்கள் :
ஹரே தீவு.
சங்கர ராமேஸ்வரர் கோயில்.
எட்டயபுரம்.
நவ திருப்பதி.
புனித இருதய தேவாலயம்.
பாஞ்சாலங்குறிச்சி.
கடல் ஆராய்ச்சி நிலையம்.
மயூரா தோட்டம்.
வல்லநாடு மான்கள் சரணாலயம்.
கொற்கை பழைய துறைமுகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக