அதியோகம் :
லக்னத்துக்கு அல்லது சந்திர லக்னத்திற்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், குரு மற்றும் இயற்கை சுபர்கள் ஒன்று கூடி ஆறிலோ அல்லது எட்டாம் வீடுகளில் மறைந்து இருந்தாலும் அதியோகம் உண்டாகும்.
அதியோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நீதிகளை வழங்குவதில் வல்லவர்கள்.
நிதியுடையவர்.
அதிகாரம் கொண்ட பதவிகளில் கீர்த்தி உடையவராக திகழ்வார்.
சக்கரவர்த்தி யோகம் :
ராகுவும், குருவும் ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் கூடி இணைந்து இருந்தால் சக்கரவர்த்தி யோகம் உண்டாகும்.
சக்கரவர்த்தி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராக இருப்பார்.
புகழால் உலகை ஆழக் கூடியவர்கள்.
புத சுக்கிர யோகம் :
புதனும், சுக்கிரனும் நல்ல பலமோடு உச்ச ஆட்சி வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் போன்ற வீடுகளிலோ அல்லது கேந்திர கோணத்திலோ அல்லது நட்பு வீடுகளிலோ அமையப் பெற்றால் புத சுக்கிர யோகம் உண்டாகும்.
புத சுக்கிர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
கலைகளில் புகழ் உடையவராக திகழ்வர்.
வாழ்வில் செல்வந்தராகவும் கலைகளான எழுத்து, ஓவியம், இசை, மற்றும் ஆடல் கலையில் சிறந்து விளங்குபவராக இருப்பார்.
குரு சண்டாள யோகம் :
குருவும், ராகுவும் ஒரு கிரகத்தில் ஒன்றாக கூடினால் ஆட்சி உச்சம் அடையாமல் இருந்தால் ஜாதகருக்கு குரு சண்டாள யோகம் அமையும்.
குரு சண்டாள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
எடுத்த காரியங்களில் வெற்றியின்மை.
முன்னேற்ற நிலை இல்லாமல் இருப்பது.
காலசர்ப்ப யோகம் :
ராசி கட்டத்தில் உள்ள ஏழு கிரகங்களும் ராகு, கேதுவிற்கு இடையே இருக்கும் நிலையே காலசர்ப்ப யோகம் ஆகும்.
கால சர்ப்ப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
ஒரு சமயம் நல்லது நடந்தால் புகழ் உண்டாகும்.
இன்னொரு சமயம் கெட்டது நடந்து தொல்லைகள் உண்டாகும்.
வாழ்க்கையில் ஏற்ற, இறக்க நிலையை உருவாக்குபவர்கள்.
குபேர யோகம் :
குரு ஆட்சியாகி லக்னத்திற்கு இரண்டிலோ அல்லது ஐந்திலோ இருக்க சனி பதினென்றிலோ அல்லது ஒன்பதிலோ உச்ச ஆட்சியாகி அல்லது இரண்டு, ஐந்து, ஒன்பது மற்றும் பதினைந்தாம் வீட்டின் அதிபதிகள் நல்ல ஆதிபத்தியம் அடைந்தால் குபேர யோகம் உண்டாகும்.
குபேர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
செல்வந்தராக வாழக்கூடியவர்.
லட்சுமி யோகம் :
சுக்கிரனும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து கேந்திர கோணங்களில் உச்ச ஆட்சியாய் அமைந்தால் லட்சுமி யோகம் கிட்டும்.
லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
மன்னர்களை போன்று அனைத்து சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்.
ஹர்ஷ யோகம் :
ஆறாம் அதிபதி ஆறாம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது ஆறாமிடத்தை ஆறாம் அதிபதியே பார்வை இடுவதால் ஏற்படுவது ஹர்ஷ யோகம் ஆகும்.
ஹர்ஷ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சுகபோக வாழ்க்கை உண்டாகும்.
நல்ல நண்பர்கள் மற்றும் மனைவி அமைவார்கள்.
கீர்த்தி மற்றும் தனம் உண்டாகும்.
சரள யோகம் :
எட்டாம் அதிபதி, எட்டாம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது எட்டாமிடத்தை எட்டாம் அதிபதியே பார்வை இடுவதால் ஏற்படுவது சரள யோகம் ஆகும்.
சரள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
ஆயுள் விருத்தி உண்டாகும்.
புகழ், தனம் மற்றும் வெற்றி கொண்ட வாழ்க்கை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக