Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

ஆயிரம் பொற்காசுகள்..!

  Image result for ஆயிரம் பொற்காசுகள்..!
ரு ஊரில் ஏழையாக இருக்கும் ஒருவர் பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்து தவமிருந்தார். அவருடைய தவத்தின் பலனாக இறைவன் அவர் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?" கேள் என்றார்.

உடனே அந்த ஏழை, 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்" என்றார். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்" என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே" என்றார்.

அதற்கு கடவுள் இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும் என்றார் இறைவன்.

அதைக்கேட்டு ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது, 'ஆனால் ஒரு நிபந்தனை" என்று இறைவன் கூறினார். ஏழை என்னவாக இருக்கும் என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தார்.

இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபப்படாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்" என்று சொல்லி மறைந்துவிட்டார்.

பிறகு அந்த ஏழை ஒரு முறை தடிக்கம்பை தட்டினார். ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் அவருக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்?" என்று கேட்டார். நடந்ததை சொல்லி பொற்காசுகளை காட்டினார்.

உடனே சன்னியாசி அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்? என்றார். உடனே இதோ பாருங்கள்! தட்டுகிறேன் என்று தட்டினார். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டார். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா?" என்றார்.

'நாளைக்குத் தட்டினால் கூட வருமா என்றார்? அதற்கு ஏழை ஆமாம் என்றார். இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?" என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. அதற்கும் அந்த ஏழை ஆமாம் என்றார். ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா? என்றார்.

உடனே அந்த ஏழை ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே என்று கோபத்தில் பேசிவிட்டார். அவர் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் மறைந்தார்.

நீதி :
கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும் நம்முடனேயே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக