நமது முன்னோர்கள் ஆயக்கலைகள் 64 இருப்பதாக கூறியிருக்கின்றனர். இவற்றில் ஜோதிட கலையும் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு மிக பெரும் கடல் போன்றது.
இக்கலையை முழுமையாக கற்க ஒரு மனித வாழ்க்கை போதாது. ஆனால் இக்கலையில் நமக்கு பயன்தரும் முக்கிய ஜோதிட விதிகளை சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.
உலகிற்கே ஒளிதருபவராகவும், நவகிரகங்களில் அனைத்திற்கும் முதன்மையாக இருப்பவர் 'சூரிய பகவான்". ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகிய, நல்ல வலுவான உடலமைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறார் சூரிய பகவான்.
எந்தவொரு ஜாதகத்திலும் லக்னம் என்பது முதல் இடமாகும். அவ்விடத்தில் இருந்தே நாம் கிரகம் நிற்கும் இடத்தை நிர்ணயிக்க வேண்டும்.
லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்? என்பதை பற்றி பார்க்கலாம்.
உடல் வலிமை உடையவர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள்.
பிழை இழைத்தவர்களை மன்னிக்கும் தன்மை குறைவு.
சுபக்காரியங்களை முன்னின்று நடத்தக்கூடியவர்கள்.
மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்.
உயர்பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
பிடிவாத குணம் கொண்டவர்கள்.
மற்றவர்களை கவரும் கம்பீரமான நடையும், தோற்றமும் உடையவர்கள்.
எதிர்ப்புகளை கண்டு பயம் கொள்ளாதவர்கள்.
நிர்வாகத் திறமை உடையவர்கள்.
புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.
எதிலும் முழு கவனத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
கோபம் கொள்ளும் தன்மை உடையவர்கள்.
சில நேரங்களில் பொறுமையற்ற தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் எளிதில் தலைமை தாங்கும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக