இந்தியாவின் வரலாறு
என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. இந்திய வரலாற்றில் அந்நிய
படையெடுப்புகள் அதன் வரைபடத்தையே மாற்ற வைத்தது. இந்தியாவின் வளமும், கலாச்சாரமும்
உலகில் இருந்து பல மன்னர்களையும் இந்தியாவை நோக்கி ஈர்த்தது. இதன்மூலம் பலரும்
இந்தியாவில் தங்கள் படைபலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள்.
இந்தியாவை
முகலாயர்கள், மௌரியர்கள், மராட்டியர்கள் என பல வம்சத்தினர் ஆண்டனர், ஆனால்
யாராலும் தென்னிந்தியாவை ஆள முடியவில்லை. வெள்ளையர்களின் ஊடுருவலுக்கு முன்னால்
வரை தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அதன் பூர்வகுடி மன்னர்களால்
மட்டுமே ஆளப்பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில்
தென்னிந்தியாவில் ஏன் எவராலும் ஊடுருவ முடியாவில்லை என்று பார்க்கலாம்.
மௌரிய பேரரசு
இந்தியாவை ஆண்ட
மிகப்பெரிய பேரரசுகள் முகலாய பேரரசும், மௌரிய பேரரசும்தான். ஆனால் அவர்களின்
இராஜ்ஜிய வரைபடத்தைப் பார்க்கும் போது அதில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருபோதும்
இருந்ததில்லை. இதற்கு நம் மன்னர்களின் வீரம், புவியியல் அமைப்பு, நட்பு என பல
காரணங்கள் உள்ளது.
முகலாய பேரரசு
இந்த இரண்டு
பேரரசுகளின் வரைபடத்தை பார்க்கும் போது நமக்குள் எழும் கேள்விகள் நம் மன்னர்கள்
அவர்களின் படையெடுப்பை தடுக்கும் அளவிற்கு வலிமையானவர்களாக இருந்திருக்க வேண்டும்
அதனால் தங்களின் படைபலத்தை இழக்க அவர்கள் விரும்பாததால் தென்னிந்தியாவில் ஊடுருவ
முயலாமல் இருந்திருக்கலாம். மற்றொன்று அவர்கள் நமது மன்னர்களுடன் நட்புறவுடன்
இருந்திருக்கலாம். நண்பர்களுடன் நிலத்துக்காக்க போரிடுவது தவறு என்பதால் அவர்கள்
படையெடுக்காமல் இருந்திருக்கலாம்.
ஏன் தென்னிந்தியாவில் படையெடுப்பு நடக்கவில்லை?
இந்த கேள்விக்கு
வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் மற்றொரு பதில் கடந்த காலங்களில் தற்போதைய தமிழ்நாடு
மற்றும் கேரளாவில் வடஇந்தியாவுடன் ஒப்பிடும்போது மக்கள்தொகை மிகவும் குறைவாக
இருந்தது. எனவே தென்னிந்தியாவால் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று
அவர்கள் நினைத்தார்கள், அதனால் அவர்கள் தென்னிந்தியாவுடன் நட்புறவில் இருந்தார்கள்
என்று கூறப்படுகிறது.
பிந்துசாரா மன்னர்
பிந்துசாரர் மௌரிய
பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். அவரின் வரலாற்றில் தன்னுடைய நண்பரான
சோழப்பேரரசின் மீது தான் ஒருபோதும் படையெடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அவரின் காலக்கட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தை இளம்செட்சென்னி என்ற மன்னரால்
ஆளப்பட்டது.
மராட்டிய வீரர்கள்
மராட்டிய பேரரசு
வளரத் தொடங்கிய காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது
முகலாயர்கள்தான். மராட்டிய பேரரசின் போது மிகப்பெரிய அச்சுறுத்தல் முகலாயமாகும்.
எனவே, மராட்டிய பேரரசு தெற்கை விட வடக்கை வெல்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தது.
முகலாய சாம்ராஜ்யம் டெல்லியை தலைநகராக உருவாக்கியது, எனவே ஒரு இராஜ்ஜியத்தை
கைப்பற்ற அதன் தலைநகரை முதலில் கைப்பற்ற வேண்டும். எனவே மராட்டிய பேரரசு வடக்கு
நோக்கி நகர்ந்தது.
தமிழ் மன்னர்கள்
தமிழ் மன்னர்கள்
பொதுவாகவே தங்களின் அருகில் இருக்கும் இராஜ்ஜியங்களுடன் நட்புறவில் இருந்தனர்.
எனவே தமிழ்நாட்டில் பாய்ந்த நதிகளின் கிளைநதிகளை மௌரிய இராஜ்ஜியத்திற்கு
வழங்கினர். இதனால் இருவருக்குள்ளும் பகை உண்டாகும் வாய்ப்புகளே ஏற்படவில்லை.
மேலும் தமிழ் மன்னர்களின் வீரத்தைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
அதனால் தங்களின் இராஜ்ஜியத்தை தமிழ் மன்னர்களுடன் மோதி சேதப்படுத்திக் கொள்ள
அவர்கள் விரும்பவில்லை.
புவியியல் காரணங்கள்
இந்தியாவின் உண்மையான
அளவைப் பற்றி நாம் இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. டெல்லி அல்லது
பாட்னாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இருக்கும் தூரம் என்பது லண்டனுக்கும்,
மாஸ்கோவுக்கும் இருக்கும் தூரத்தை விட அதிகமாகும். இது கிட்டதட்ட ஐரோப்பாவை விட
அகலமானதாகும்.
இந்திய வரலாறு பற்றிய உண்மைகள்
நிகழ்கால
பயணங்களுக்கும், கடந்த கால பயணங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. கடந்த காலங்களில்
2500 கிலோ மீட்டரை படையுடன் கடப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தற்போதைய
காலகட்டத்தில் கூட கடல் பயணம் என்பது அவ்வளவு எளிதானதல்ல.
கேரளா
தூரம் மட்டுமின்றி
கேரளாவை அந்நிய ஊடுருவலில் இருந்து பாதுகாத்தது அதன் புவியியல் அமைப்பாகும்.
கடவுளின் தேசமான இது மங்களூர், கன்னியாகுமரி மற்றும் பாலக்காடு சிறிய இடைவெளிகளைத்
தவிர முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையால் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில் பிரிட்டிஷ் படையெடுப்பு
முதலில் இரண்டு கடல்
வழிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுவாக கேரளாவைத் தாக்குவதற்கான ஒரே சுலபமான
வழி கடல் பாதை வழியாகும், அதனால்தான் அதைக் கைப்பற்றிய முதல் சக்தியாக இருந்தது
பிரிட்டிஷ்காரர்கள்தான். பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கி அதன்பின் ஊடுருவிய அனைத்து
வெளிநாட்டினரும் நயவஞ்சகம் மற்றும் துரோகம் மூலமாகத்தான் ஆக்கிரமித்தார்களே தவிர
ஒருபோதும் அவர்களால் போரிட்டு தென்னிந்தியாவிற்குள் நுழைய இயலவில்லை. நமது தமிழ்
மன்னர்களின் வீரம் நம்மை அவ்வாறு அரணாக காத்து நின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக