இன்றைய நவீன காலக்கட்டத்தில் மருத்துவ
வளர்ச்சி என்பது விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. வலியே இல்லாமல் பல
தீவிரமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்
கடந்த காலங்களில் நோய்களை குணப்படுத்த பல மிருகத்தனமான மற்றும் விசித்திரமான
சிகிச்சை முறைகள் இருந்தது.
கடந்த காலத்தை
திரும்பி பார்க்கும்போது இந்த சிகிச்சை முறைகளுக்காக பயந்தே மக்கள் தங்களை
ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொண்டனர். ஏனெனில் இந்த மருத்துவ சிகிச்சைகள் வாழும்
ஆசையையே மக்களுக்கு போக்கிவிடும். இந்த பதிவில் கடந்த காலத்தில் இருந்த
விசித்திரமான சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளலாம்.
கழுகின் சாணம்
பிரசவத்தின் போது
பெண்களின் வலியை குறைக்க கழுகின் சாணம் பயன்படுத்தப்பட்டது. பிரசவத்தின் போது
போதுமான இடைவெளி இல்லாதபோது கழுகின் சாணத்தைக் கொண்டு கட்டுக்கட்டி பெண்ணின்
இடுப்பு வலியை மருத்துவர்கள் குறைத்தார்கள்.
சூடு வைப்பது
உங்கள் காயத்தின்
மீது சூடான இரும்புக் கம்பியை வைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள். இதை கேட்கவே பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இது கடந்த
காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு சிகிச்சை முறையாகும். தொற்றுநோய்கள் பரவாமல்
இருக்க காயத்தின் மீது இரும்புக்கம்பியை வைக்கும் பழக்கம் இருந்தது. காயங்களை
குணப்படுத்தவும் இந்த முறை பயன்படுத்த வந்தது.
மலக்குடலில் புகைப்பது
இந்த சிகிச்சை
முறையில், மருத்துவர்கள் நோயாளிகளின் மலதுவாரத்தின் வழியே மலக்குடலுக்குள்
புகைப்பார்கள். இந்த சிகிச்சை முறை குடல் வலி, சுவாசக்கோளாறு போன்றவற்றை
குணப்படுத்த பயன்படுத்தப்பட்டது. மயக்கம், குடலிறக்கம் போன்ற நோய்களையும் இந்த
சிகிச்சை முறை குணப்படுத்துவதாக நம்பப்பட்டது.
ஆண்களுக்கான கருத்தடை
கருத்தடை செய்து
கொள்ள விரும்பும் ஆண்களுக்கு நீராவி முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. 8*6 அளவில்
இருக்கும் பெட்டிகளில் ஆண்கள் அமரவைக்கப்ட்டு அதிக அழுத்தமுள்ள நீராவியைக் கொண்டு
கருத்தடை செய்யப்பட்டது.
மன நோயாளிகள்
மனநிலை
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உடலைக் காற்றுக் கூட தொட முடியாத அளவிற்கு ஈரமான
போர்வைகளுக்குள் இறுக்கமாக போர்த்தப்பட்டனர். இந்த சிகிச்சை முறை அவர்களை அமைதியாக
வைத்திருக்கும் என்று கருதப்பட்டது.
இரும்பு நுரையீரல்
போலியோவிற்கான
தடுப்பூசிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரும்பு
நுரையீரலின் வலியைத் தாங்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. போலியோ அறிகுறிகள்
இருக்கும் குழந்தைகளை மருத்துவர்கள் ஒரு இரும்பு நுரையீரல் பெட்டிக்குள் வைத்து
சிகிச்சை அளித்து பாதிக்கப்பட்ட தசைகளை வலுப்படுத்தினர்.
சிறுநீர் கிருமி நாசினிகள்
இப்போது அறுவை
சிகிச்சைகளின் போது பலவிதமான கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்
விக்டோரியன் காலத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்யும் போது சிறுநீரை
ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுத்தினர்.
கருத்தரிப்பு சோதனை
குமட்டல், வாந்தி,
சோர்வு போன்ற அறிகுறிகள் கருத்தரித்ததுக்கான ஆரம்பகால அறிகுறிகளாக இருந்தது. ஆனால்
ஜெர்மன் மருத்துவர்களான ஆஷைம்-சோண்டெக் கருத்தரிப்பை உறுதி செய்து கொள்வதற்கு
முயல் சோதனையை பயன்படுத்தினர். இந்த நடைமுறையின் படி கருத்தரித்ததாக நம்பப்படும்
பெண்ணின் சிறுநீர் ஒரு பெண் முயலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். அதன்பின் 3-4
நாட்களுக்குள் அந்த முயலுக்குள் விசித்திரமான அறிகுறிகள் ஏற்பாட்டால் அந்த பெண்
கருத்தரித்து உறுதி செய்யப்படும்.
எலும்பு நோய்களுக்கான சிகிச்சை
9 மாதத்திற்கு
குறைவான குழந்தைகளுக்கு எலும்பு நோயான ரிக்கெட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த
சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையின் படி குழந்தைகள்
செயற்கையாக உருவாக்கப்பட்ட சூரிய ஒளிகதிர்களின் கீழ் அமரவைக்கப்படுவார்கள். இது
சருமத்தில் இருக்கும் வைட்டமின் டி -ஐ செயலற்ற நிலையில் இருந்து செயல்படும்
நிலைக்கு மாற்றும்.
இரத்தம் சிந்துதல்
இந்த நுட்பம் பரவலாக
பயன்படுத்தப்படும் குணப்படுத்தும் சிகிச்சைகளில் ஒன்றாகும். இந்த நடைமுறையின்
கீழ், அசுத்தமான இரத்தத்தை திரும்பப் பெற நோயாளியின் கையில் ஒரு காயம்
உருவாக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக