யாகத்தில் இடப்படும் பொருட்கள் எந்த தெய்வங்களுக்குரிய
மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த தெய்வத்தை சென்று அடைகிறது என்பது ஐதீகம். பசு
நெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த
அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு
உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா,
குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக
இருக்கின்றன.
பசு நெய்
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில்
நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த
மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால்
இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள்
கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத
மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட
ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
ஆயுர்வேதம்
சூரியன் உச்சத்தில் இருக்கும்போது, அதாவது பித்த காலத்தில்
மட்டுமே நெய் உட்கொள்ள வேண்டும். பித்த காலம் என்பது மதிய வேளை. அப்போதுதான்
உணவில் நெய்யைக் கலந்து சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது ஆயுர்வேதம். நெய்
ஒரு மிகச் சிறந்த உணவு மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. நெய்
செரிமானத்துக்கும் ஏற்றது, ஞாபகசக்தியை அதிகரிக்கக்கூடியது, புத்திக்கூர்மைக்கு
உகந்தது. பித்தத்தைக் குறைக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.
சாத்வீக குணம்
பசு மாட்டிலிருந்து கறந்த பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யையே
உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலப்படமில்லாத சுத்தமான நெய்யை சாப்பிட
வேண்டும். பசும் பாலிலிருந்து நெய் தயாரிக்கப்பட்டாலும், அந்த நெய் எந்த ஒரு
விலங்குகளையும் கொல்லாமல் பெறப்படுவதால் சாத்வீக உணவு பட்டியலில் நெய்
சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த நெய்யை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நேர்மறையான
எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. கோப தாபங்கள் குறைந்து சாத்வீக குணங்கள்
உண்டாகிறது.
ஒமேகா கொழுப்பு
அமிலங்கள்
நெய்யில் மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.
இதில் நீரில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் இ உள்ளது. வைட்டமின் ஏ கண்களுக்கு
இன்றியமையாதது. வைட்டமின் இ உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட
உதவுகிறது. இதில் வைட்டமின் கே2 மற்றும் சிஎல்ஏ என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.
புல் மட்டுமே சாப்பிடும் மாட்டினுடைய பாலில் இச்சத்து அதிகம் உள்ளது. இது அதிக
அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியது. குடலில் ஏற்படக்கூடிய புண்கள், வீக்கம்
மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
சத்தான நெய்
நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்
அதிகம் நிறைந்திருக்கின்றன. நெய்யில் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம்
நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக
செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. அதிக உடல்
உழைப்பில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் நெய் அதிகம் சாப்பிடுவதால்
அவர்களின் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க உதவுகிறது. நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு
அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்றவை தாயின் கருவிலுள்ள குழந்தையின்
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
குருபகவான்
நெய்யை குருவிற்கு காரகர். நம் உடலில் கொழுப்புச் சத்து
சேர்வதே நம் உடல்நிலை கெடுவதற்குக் காரணம். பொதுவாக ருசியாக இருக்கும்
தின்பண்டங்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும். ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது,
குரு பகவான் ஜாதகத்தில் வலிமையாக இருக்கப் பிறந்தவர்கள் மற்றும் இரண்டாம்
பாவகத்தில் அமையப் பெற்றவர்கள் இவ்வகைத் தின்பண்டங்களை அதிகம் உண்ணும் வாய்ப்பு
பெற்றவராக இருப்பர்.
மருத்துவ குணங்கள்
உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், அசிடிட்டி, மூட்டு வலி,
நீரிழிவு நோய், இருதய நோய்கள், பிசிஓடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க தினமும் ஒரு
தேக்கரண்டி நெய்யை காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் கொலஸ்ட்ரால் பிரச்னை ஏற்படும்
என்றும் நம்மில் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடலில் கொலஸ்ட்ரால் மற்றும்
இரத்த சர்க்கரை ஆகியவற்றை சீராக வைக்க நெய் சாப்பிடலாம். உணவில் எப்படி நெய்
சேர்த்து கொள்வது என்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.
ஆழ்ந்த உறக்கம்
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தாராளமாக
நெய் சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு கொலஸ்ட்ரால்
மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும். தினமும் 3 டீ ஸ்பூன் நெய் சேர்த்து
கொள்வது உடலுக்கு நல்லது. நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நெய் சேர்த்து
சாப்பிட்டு வரலாம். பிற்பகலில் சூடான உணவில் நெய் சாப்பிடுவதால் மலச்சிக்கல்
மற்றும் செரிமான பிரச்னை இருப்பவர்கள் இரவு நேர உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
இதனால் இரவு நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும்
நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதனால்
நாள் முழுக்க புத்துணர்வாக இருக்க முடிகிறது. பருவ மாற்றத்தின்போது நெய்
சாப்பிடுவதால் உடலில் வெப்பநிலை சீராக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும்
அதிகரிக்கிறது. முக்கடைப்பு ஏற்பட்டால் நெய் சாப்பிடலாம். ஆயுர்வேத
குறிப்புகளின்படி, சில துளிகள் வெதுவெதுப்பான நெய்யை மூக்கில் விட்டால்
மூக்கடைப்பு குணமாகும். காலை எழுந்தவுடன் இதனை செய்வதால் நிவாரணம் கிடைக்கிறது.
நமது உடலில் வெளிப்புறத்திலிருந்து நுழைகின்ற நுண்ணுயிரிகளால் பல்வேறு நோய்
பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
வேதிப்பொருட்களில் கில்லர் டி செல்கள் அதிகம் இருக்கின்றன. இத்தகைய நோய்த்
தொற்றுக் கிருமிகளை அழித்து உடல் நலத்தைக் காக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக